பேச்சு:பைஞ்சுதை

Add topic
There are no discussions on this page.

கான்க்ரீட் இற்கு பசுங்காரை அல்லது காரை என்ற தமிழ் சொல் இருப்பதாக அறிகிறேன். --மு.மயூரன் 17:56, 25 ஜூலை 2006 (UTC)

நானும் காரை, சுண்ணாம்புக்காரை, பைஞ்சுதைக் காரை, சிமெண்ட்டுக் காரை என வெவ்வேறு பொருட்களைக் குறிக்கும் பெயர்களைக் கேட்டிருக்கேன். ஆனால் பைஞ்சுதை என்பது சிமெண்ட்டு என்றாலும், பைஞ்சுதைக் காரை (அல்லது சிமெண்ட்டுக் காரை) என்பது காங்க்கிரீட்டா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

மேலும இன்னொன்று் (இது பல முறை பேசப்பட்டதுதான்), வல்லின றகரம்தான் வரவேண்டும் எனில், காங்கிறீட்டு என்றாவது எழுதலாகதா? இலங்கை வழக்கு என்பதை அறிகிறேன், ஆனால் பொதுவாக எழுதும் பொழுது, பொதுப்பயன்பாட்டைக் கருத்தில் கொள்ளவேண்டாவா? இலங்கைத்தமிழர்களைப் பொருத்த அளவிலே இது சரியான ஒலிப்பாக இருக்கலாம், 65 மில்லியன் தமிழர்களுக்கு இது மிகவும் தவறான ஒலிப்பாகத்தோன்றும். மேலும் காங்கிறீட்டு என்று எழுதுவதால் இலங்கைத் தமிழர்கள் ஒலிப்பில் அதிக வேறுபாடு இல்லை (சிறு வேறுபாடு இருக்கலாம் நுனிநா, மேலண்ணத்தை தொடும் நா), ஆனால் தமிழகத்தமிழர்கள் பெரும் வேறுபாடு காண்கின்றனர். கீற்று, நாற்று, நேற்று, காற்று, வெற்றி, நெற்றி என்று நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் பிழைபட ஒலிக்க வழி வகுக்கும். சுற்று வேறு சுட்டு வேறு. கற்று வேறு கட்டு வேறு, கூற்று வேறு கூட்டு வேறு. அருள்கூர்ந்து மிகப்பிழையான வழக்கை கைவிட வேண்டுகிறேன். இதனை ஆலமரத்தடியில் விட வேண்டும் என்றும் உணர்கிறேன்.--C.R.Selvakumar 21:12, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

ர, ற, ட பயன்பாடு குறித்த விரிவான உரையாடல் இங்கு நடைபெறுகிறது--ரவி 12:23, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

concrete - கற்காரை cement - காரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பைஞ்சுதை&oldid=418555" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பைஞ்சுதை" page.