பேச்சு:பொதுவுடைமை அனைத்துலகம்


தலைப்பு புரியவில்லை! விளக்கம் தேவைப்படுகிறது. இது "அனைத்துலகப் பொதுவுடைமை" என்பதா?

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 07:58, 27 திசம்பர் 2010 (UTC)Reply
Communist International என்பதன் தமிழாக்கம்!!. communist என்றால் பொதுவுடமை, international என்றால் அனைத்துலகம். வேறு பொருத்தமான தலைப்பு இருந்தால் பரிந்துரைக்கவும். --Natkeeran 08:08, 27 திசம்பர் 2010 (UTC)Reply

இதற்கு இணையாகத் தமிழகம் சார்ந்து பொதுவுடைமைக் கட்சிகளில் கம்யூனிச அகிலம் என்ற கலவைச் சொல்லே பயனில் உள்ளது. Communist International என்பதன் பொருள் உலகப் பொதுவுடைமை அணி என்பதே ஆகும். எளிதாக வழங்க இதைச் சுருக்கி பொதுவுடைமை உலகம் எனும் சொல்லைப் பயன்படுத்தலாம். அல்லது உடனே விளங்க பொதுவுடைமை அகிலம் எனும் வடமொழியும் கலந்த கலப்புச் சொல்லையும் ஒரு விதிவிலக்காகப் பயன்படுத்தலாம். இப்போது இந்தக் கட்டுரையை விரிவாக்கம் செய்ய கருதியுள்ளேன். எனவே அனைவரும் பொதுவாக ஏற்கும் சொல்லை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:20, 30 மார்ச் 2018 (UTC)

கட்டுரை நிறைவு பெற்ற பின்னர் தலைப்புக் குறித்து ஆராயலாம். உலகப் பொதுவுடைமை அணி சரியான மொழிபெயர்ப்பாகக் கருதுகிறேன்.--Kanags (பேச்சு) 22:53, 30 மார்ச் 2018 (UTC)
Return to "பொதுவுடைமை அனைத்துலகம்" page.