பேச்சு:மகாயான பௌத்தம்
இக்கட்டுரையின் தலைப்பு மகாயான பௌத்தம் என்றே இருக்கலாம். பிற மொழிகளிலும் இருப்பதைப் பாருங்கள்: சீனம்: 大乘, Dàshèng; ஜப்பானியம்: 大乗, Daijō; கொரிய மொழி: 대승, Dae-seung; வியட்னாமிய மொழி: Đại Thừa; திபெத்திய மொழி: theg-pa chen-po; மங்கோலிய மொழி: yeke kölgen. எனவே பிற மொழிகளில் அத்தனை வேறுபாடு இருக்கும் பொழுது தமிழில் தமிழ் முறைப்படி மகாயான பௌத்தம் என்று எழுதுவதால் தவறில்லை. பல இடங்களிலும் மகாயானம் என்றே எழுதியும் உள்ளனர். --செல்வா 05:44, 28 நவம்பர் 2007 (UTC)
மஹா-வுக்குப் பதிலாக மகா என்பது தமிழில் பரவலான வழக்கில் உண்டு. (எ.கா - மகாகவி). தலைப்பை மாற்றி இருக்கிறேன்--ரவி 22:49, 28 நவம்பர் 2007 (UTC)
ஆம். நான் தான் இதை கவனிக்கத் தவறிவிட்டேன். மகாயான பௌத்தம் என்ற வழக்கை கல்கி அவர்கள் தன்னுடைய சிவகாமியின் சபதம் நாவலில் பரவலாக கையாண்டிருப்பார். தவறுக்கு மன்னிக்கவும் வினோத் 15:58, 29 நவம்பர் 2007 (UTC)
வினோத், இன்னொரு முறை நீங்கள் எதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டாம் :) சில மேம்பாடுகள் சுட்டிக்காட்டப்படுவதும் திருத்தப்படுவதும் இங்கு வாடிக்கை தான்.--ரவி 17:34, 29 நவம்பர் 2007 (UTC)