பேச்சு:மகாவாக்கியங்கள்

இந்த மேற்கோள் தேவையா?

தொகு

காஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்[1]:

மேற்கண்ட மேர்கோள் மதிப்பிற்குரிய காஞ்சி பராமாச்சாரியர் தந்தது என்றாலும், இங்கு பொருள் உள்ளதாகப் படவில்லை. பரமாச்சாரியர் எப்பொழுது எதற்காக இக்கூற்றை முன்வைத்தார் என்று அறியேன், ஆனால், மகாவாக்கியங்கள் துய்ப்பறிவால் அறிந்துணர்பவை, கற்றுக்கொடுக்கக்கூடியவை அல்ல. அனுபூதி உண்மைகள். மெய்யுணர்வுண்மைகள். மேலும் சன்யாசத்தில் நுழையாமலும் இவற்றை உணரலாம். வேதகால இருடிகள் (ரி^சிகள்) பலரும் திருமணமாகி மணவாழ்வில் இருந்தவர்கள். பிரம்மச்சரியம், கிரகசுத்தம், வானப்பிரசுத்தம், சன்யாசம் என்னும் நான்கு-நிலை பாகுபாடு பிற்காலத்தில் ஏற்பட்டது -இவை பொதுவானவை அல்ல. புத்த-சமண மதங்களின் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கலாம். எப்படியாயினும் மேலே சுட்டிய மேற்கோள், இக் கட்டுரையில் பொருத்தமாக இல்லாமல் இருப்பதாக நினைக்கிறேன். எனவே நீக்குவது நல்லது. ப்பயனர் பேரா வி.கே அல்லது வேறு பயனர்கள் யாரேனும் இதனை ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 20:20, 19 ஏப்ரல் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாவாக்கியங்கள்&oldid=368059" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகாவாக்கியங்கள்" page.