பேச்சு:மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

பேராசிரியர் தாமசு மால்ட்டன் மின் தமிழ் நூலகம்

தொகு

டாய்ட்சுலாந்தில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பேராசிரியர் மால்ட்டன் அவர்கள் மதுரைத் திட்டத்திற்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் பெரும் பகுதியை இலத்தீன் எழுத்துக்களில் முறை வகுத்து, யாரும் வந்து இலவசமாகத் தேடுமாறு அமைத்திருந்தார்கள். மதுரைத் திட்டத்தில் இலத்தீன் எழுத்துக்களில் இல்லாமல், மயிலை போன்ற தமிழ் எழுத்துருவில் அமைந்திருந்தது சிறப்பாகும். எனவே தாமசு மால்ட்டன் அவர்களின் தமிழிலக்கிய மின் பதிப்புகள் மதுரைத் திட்டத்திற்கு முன்னோடி. தாமசு மால்ட்டன் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்.--செல்வா 04:31, 29 நவம்பர் 2008 (UTC)Reply

Return to "மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்" page.