பேச்சு:மனித மரபணுத்தொகைத் திட்டம்

மனித மரபணுத்தொகைத் திட்டம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதன் தலைப்பாஇ மனித/மாந்த மரபுத்தொகுதித் திட்டம் அல்லது முழுமரபுத் திட்டம் என மாற்றப் பரிந்துரைக்கின்றேன். அகராதி என்பது சரியான சொல்லாகத் தெரியவில்லை. Genome என்பதை முழுமரபியம், மரபுத் தொகையம் எனலாம். proteome என்பதை முழுப்புரதியம் (முழுமரபியம் வெளிப்படுத்தும் புரதங்கள்) என்றும் கூறலாம்--செல்வா 04:09, 9 மார்ச் 2010 (UTC)

பேச்சு:genome உரையாடலையும் பாருங்கள். மரபணுத்தொகுதி, அல்லது மரபணுத்தொகை என்பது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது. System என்பதுடன் குழப்பிக் கொள்ளாமல், மரபணுத்தொகை என்றே குறிப்பிடலாம் என்பது எனது கருத்து. அனைவரும் ஏற்றுக் கொண்டால், இது தொடர்பான கட்டுரைகளில் தகுந்த மாற்றங்களை செய்யலாம்.--கலை 10:02, 1 சூன் 2011 (UTC)Reply


கலை, தகுந்த மாற்றங்களைச் செய்யுங்கள். பிந்திய பதிலுக்கு மன்னிக்க. --Natkeeran 23:43, 1 சூன் 2011 (UTC)Reply
Return to "மனித மரபணுத்தொகைத் திட்டம்" page.