பேச்சு:மயிலாப்பூர்

மயிலாப்பூர் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கோபி, கபாலீசுவரர் கோயில் புகழ் பெற்றதுதான். அதே போல பெருமாள் கோயில்களும், சாந்தோம் சர்ச்சும், இசுலாமிய வழிபாட்டுத்தலங்களும் சமணத் தலங்களும் புகழ் பெற்றவையே. திருமயிலையில் நிகழும் பங்குனி விழாவின் பொழுது நிகழும் அறுபத்துமூவர் திருவிழாவுக்கு வரும் மக்கள் கூட்டமானது ஒப்பரிய ஒரு பெருங்கூட்டம். இதனை எல்லாம் ஒழுங்குற தொகுத்து எழுத்தல் வேண்டும் (சற்று கடினம்தான்). பல்வேறு மதம் பற்றி கூறும் பொழுது நடுநிலை காப்பதும் அவசியம். வரதராஜன் எழுதியதை முற்றிலும் நீக்காமல், எப்படி திருத்தி எழுதலாம் என பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.--செல்வா 16:32, 19 ஜனவரி 2007 (UTC)

அவர் சொல்லுக்குச் சொல் விளம்பர நோக்கில் வெளியிணைப்புக் கொடுத்திருந்தமையே உள்ளடக்கத்தின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே முன்னிலையாக்கினேன். குறித்த கோயில் தொடர்பான தகவல்கள் எனக்குப் பரிச்சயமற்றை. ஆதலால் தயவுசெய்து பொருத்தமான மாற்றங்களைச் செய்து உதவ வேண்டுகிறேன். நன்றி. --கோபி 16:56, 19 ஜனவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மயிலாப்பூர்&oldid=3591491" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மயிலாப்பூர்" page.