பேச்சு:மரபணு தொடரிகள்

தேவநேய பாவணரின் கூற்றுப்படி காரணம் என்பது தமிழ் சொல் அல்ல. அவர் அச்சொல்லை கரணியம் என தமிழ் படுத்தி உள்ளார். அதனால் காரணி என்கிற சொல்லை கரணி என நான் எழுத விரும்புகிறேன். நான் பாவணரின் வழியில் செல்ல விரும்புபவன். அதனால் காரணி என நீங்கள் மாற்றி அமைந்ததை கரணி என் மறுபடியும் மாற்றி விட்டேன்.

நன்றி

--Munaivar. MakizNan 20:20, 26 ஜூலை 2009 (UTC)

ஆமாம், நானும் பல இடங்களில் கரணியம் (காரணம்) என்று பயன்படுத்தி உள்ளேன். ஒன்றைச் செய்வதற்குப் பயன்படும் (துணை செய்யும்) வேறு ஒன்றைக் கரணி என்று கூறுவது மிகவும் பொருத்தமான ஒன்று. கரண்டி என்னும் சொல்லும் கருவி என்னும் சொல்லும், இதன் அடிப்படையில் வந்தவையே. ஆங்கிலத்தில் "instrumental", "by its reason" "enabling" என்று பொருள்படும். சிக்மா கரணி என்பது சரியான சொல். (A sigma factor (σ factor) is a prokaryotic transcription initiation factor that enables specific binding of RNA polymerase to gene promoters.). "enables specific binding" என்று குறிப்பதால் அதனைக் கரணி (செய்விப்பது) என்னும் பொருள் முக்கியமானது. factor என்னும் சொல்லால் கணிதத்தில் பயன்படும் காரணி என்னும் சொல்லாக இருக்குமோ என்று மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். காரணம் என்பதற்கு கரணியம் என்று கூறுவதும் சரியே. ஆனால் காரணம் என்றும் பலர் பயன்படுத்துகிறார்கள். ஆகவே நான் இரண்டையும் பயன்படுத்துகிறேன். --செல்வா 00:37, 27 ஜூலை 2009 (UTC)


நன்றி செல்வா,

பல கருத்துகளை அறிந்து கொண்டேன். --Munaivar. MakizNan 01:16, 27 ஜூலை 2009 (UTC)

Start a discussion about மரபணு தொடரிகள்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரபணு_தொடரிகள்&oldid=409360" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மரபணு தொடரிகள்" page.