பேச்சு:மரபுப்பொருளியல்
classical என்பதற்கு தொன்மை என்பது எவ்வளவு பொருத்தம் என்பது தெரியவில்லை. classical = செந்நெறி என்று கலை சார்ந்த துறைகளில் பயன்படுத்துவர். இதுதான் வழக்கமான் சொல் என்றால் எனக்கு எவ்வித ஆட்சோபனையும் இல்லை. --Natkeeran 21:58, 8 அக்டோபர் 2006 (UTC)
நக்கீரன் இச் சொல்லை நான் இந்திய ஆசிரியர் ஒருவரின் நூலில் கண்டேன்.அதுவே சரி என எனக்குப்படுகின்றது.கலைத்துறை போல் இதனைக் கருதமுடியாது முதலில் அமைப்பு ரீதியாகத் தோன்றிய பொருளியல்சார் கருத்துக்களே இவை ஆகவேதான் அவ்வாறு அழைக்கப்படுகின்றது பல்வேறுபட்ட காலகட்டத்தில் தொன்றிய கொள்கைககள் பல்வேறு பொதுப்பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது அவைபற்றியும் கட்டுரை வரைய எண்ணியுள்ளேன்.அது நிற்க இன்னும் கட்டுரையை நான் முடிக்கவே இல்லை மேலும் குறிப்பெடுத்தபின் எழுதவுள்ளேன் - -கலாநிதி 16:45, 9 அக்டோபர் 2006 (UTC) kalanithe
- கலாநிதி, classical என்பதற்கு இவ்விடத்தில், மரபுப் பொருளியல் எனலாம். அல்லது தற்கால மரபுப் பொருளியல் எனலாம். classical என்பது பொதுவாக காலத்தால் அழகுநுணுக்கங்களும் சிறப்புகளும் செறிவுற்று (செறிவு = அடர்த்தி), வளம் கூட்டாத, தற்காலிக மோகங்கள முதலியன் கழியப்பட்டு சிறப்பான நிலை எய்திய நிலையை classical, செம்மையுற்ற, பண்படைந்த நிலையாகக் கொள்ளலாம். இங்கே ஆடம் ஸ்மித், ஜோஹான் ஹைன்ரிஷ் ஃவான் துயூனன் போன்றோர் நிறுவிய பொருளியல் துறையை எச்சொல்லால் classical என்னும் பொருள் தர குறிப்பது என்பது சற்று கடினம் தான் (ஏன் எனில் காலத்தால் பல நூற்றாண்டுகள் கழிய வில்லை, எனினும் சிறப்பெய்தியுள்ள அறிவுத்துறை). செம்மரபுப் பொருளியல், அல்லது தற்கால மரபுப் பொருளியல் என்று குறிக்கலாம் என்பது என் கருத்து. தொன்மை, தொல் என்பது அவ்வளாவாக பொருந்துவதாகத் தோன்றவில்லை. நீங்க்களும் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--C.R.Selvakumar 20:05, 10 அக்டோபர் 2006 (UTC)செல்வா
செல்வா கருத்துக்கு நன்றி ஆங்கிலவிக்கி உரையாடல் பக்கத்திலும் ஒருவரால் இதற்கு classical என பெயர் வர என்ன காரணம் என கேட்கப்பட்டிருந்தது.ம்ம் மரபுப் பொருளியல் சரியாகலாம்.ஆனால் neo classical economics என்றும் ஒர் பதமும் உள்ளது.இதற்கு என்ன மாதிரி பெயர் சுட்டலாம்? மேலும் ஆராய்ந்த பின் முடிவெடுக்காலாம் என என்னுகின்றேன்.--கலாநிதி 16:45, 11 அக்டோபர் 2006 (UTC)
கலாநிதி, புதுமரபுப் பொருளியல் என குறிக்கலாம்.--C.R.Selvakumar 16:57, 11 அக்டோபர் 2006 (UTC)செல்வா
தொன்மை என்பது ancient என்று பொருள்படும். இங்கு பொருந்தாது! இங்கு மரபு, செம்மரபு என்னும் சொற்களில் ஏதேனும் ஒன்று பொருந்தும். மரபுப் பொருளியல் அல்லது மரபுப் பொருள்முதலியல் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். விரைவில் மாற்றப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 18:13, 7 அக்டோபர் 2008 (UTC)