இலங்கை வழக்கம் குறிப்பு

தொகு
  • மின்கடத்தலி, கடத்தலி - poor conductor
  • குறைகடத்தி - semiconductor
  • கடத்தி - conductor
  • மீகடத்தி - superconductor
  • insulate, insulation - மின்காப்பிடுதல், மின்காப்பு
  • insulated - மின்காப்பிடப்பட்ட(து)

--Natkeeran 03:23, 31 மே 2006 (UTC)Reply

நன்றாகக் கடத்தும் பொருளை நன்கடத்தி என்றும் நன்றாக கடத்தாப்பொருளை வன்கடத்தி என்றும், அரைகுறையாக கடத்தும் பொருளை குறைக்கடத்தி என்றும் ஏறத்தாழ தடையேயின்றி கடத்தும் பொருளை மீகடத்தி என்றும் சொல்லலாம்.

மின்கடத்தான், மின்கடத்திலி (மின்கடத்தலி என்பது தவறு என்று கருதுகிறேன்) என்பவை சற்று மிகையான பொருள் தருவது (முற்றிலும் கடதாதவை அல்ல என்பதால்). ஏறத்தாழ அறவே கடத்தாப்பொருள் போலதான் என்றாலும் அதிகம் கடத்தாப்பொருள் என்பதை வன்கடத்தி என்றும், நன்றாகக்கடத்துவது பற்றி நன்கடத்தி என்றும் மக்களுக்குச் சொல்லிகொடுக்க எளிதாகவும், பொருள் நேர்த்தி உடையதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். மாற்ற வேண்டும் என்றால், மின்கடத்திலி (மின்கடத்தலி அல்ல) என்று மாற்றிக்கொள்ளலாம்.--C.R.Selvakumar 04:01, 31 மே 2006 (UTC)செல்வாReply


மேலே நான் எனது கருத்தை சொல்லவில்லை. எழுத்துக்கூட்டலும் எனதல்ல. கடத்தி (conductors), நன்கடத்தி (good conductors), வன்கடத்தி (poor conductors), குறைகடத்தி (semi conductors), மீகடத்தி (super conductors) நன்றாகவே எனக்கு படுகின்றது. --Natkeeran 04:11, 31 மே 2006 (UTC)Reply

வன்கடத்தி என்பது வலிமையான கடத்தி என்ற எதிர்மறையான கருத்தைத் தருகிறது.--Kanags \உரையாடுக 01:48, 13 சூன் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்_வன்கடத்தி&oldid=1864568" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின் வன்கடத்தி" page.