பேச்சு:முத்தரசநல்லூர்
// 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 7 -10 தெருக்கள், .
இங்கு இரயில் தண்டவாளம், திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, காவிரி ஆறு இவை மூன்றும் அருகருகே இருப்பதை காணலாம்.//
மேற்கண்ட வரிகள் கலைக்களஞ்சியத்துக்கு அவசியமா? எப்படி மாற்றி அமைக்கலாம்?--Ravidreams 08:57, 21 நவம்பர் 2006 (UTC)
- //2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள்//---மக்கள் தொகை கணிப்பை இணைக்க்கலாம்.
- //7 -10 தெருக்கள் பரப்பளவு போன்ற விரங்களை இணைக்கலாம்
- //சிவன் கோவில், மதுரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சில தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், 10-15 கடைகள், தபால் நிலையம், மின்னனு தெலைபேசி நிலையம், ஒரு திருமண மண்டபம், சுமார் 200 - 300 ஏக்கர் விளைநிலம் இவையனைத்தும் முத்தரசநல்லூர் கிராத்தை செழுமை படுத்துகிறது// இது தேவையற்றது. எல்லா ஊரிலும் இருப்பது தானே கோவிகள் பற்றி முக்கிய வணக்கத்தளங்களாக இருப்பின் கூறலாம். மரத்தடி பிள்ளையார் அல்லது சந்தியில் உள்ள மாதா சிலை பற்றி விக்கியில் எழுததேவையில்லை. --டெரன்ஸ் \பேச்சு 15:24, 23 நவம்பர் 2006 (UTC)
தேவையான மாற்றங்கள்
தொகுஜெயராமன், இது போன்ற சிற்றூர்களை பற்றிய தகவல்களை நிச்சயம் விக்கிபீடியாவில் இடம்பெறலாம். ஆனால், பின்வரும் தகவல்களை தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
- திருச்சிக்கு எந்தத் திசையில் உள்ளது? இவ்வூரை திருச்சி-கரூரில் இருந்து சென்று அடைவதற்கான பேருந்து எண்கள் யாவை? இங்கு தொடர்வண்டி நிலையம் ஒன்று இருப்பதாகவும் நினைவு. திருச்சி நிலையத்தில் இருந்து இது எத்தனையாவது நிலையமாக உள்ளது? திருச்சியில் இருந்து சென்றடைய ஆகும் நேரம் என்ன?
- அருகில் உள்ள குறிப்பிடத்தக்க சிற்றூர்கள் யாவை (குளித்தலை, பெட்டவாய்த்தலை..போன்று)?
- இங்குள்ள மக்களின் குறிப்பிடத்தக்க தொழில்கள் யாவை?
- இது ஊராட்சியா இல்லை துணை ஊராட்சியா போன்ற குறிப்புகள். இவ்வூராட்சித் தலைமை பொறுப்பு reserved தொகுதியா என்பது போன்ற தகவல்கள்.
- வரலாற்றுச் சிறப்பு உள்ளதாக கூறி உள்ளீர்கள். அது என்ன? தெளிவு இல்லை என்றால் அக்குறிப்பை நீக்கி விடலாம்.
- மக்கள் தொகை தகவல்கள் ஏதும் ஆதாரத்துடன் இருந்தால் அது குறித்து தரவும்.
- நீங்கள் இந்த ஊர்க்காரர் என்பதால், புகைப்படங்கள் ஏதும் இருந்தாலும் இணைக்கலாம்.
திருத்தப்பட்டுள்ளது
தொகுரவி அவர்கள் குறிப்பிட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப கட்டுரை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எப்படி இணைப்பது என்பது பற்றி யாரேனும் கூறினால், ஒரு சில புகைப்படங்களை இணைக்க முடியும். --Jayaram10g 13:43, 20 டிசம்பர் 2006 (UTC)
முத்தரசநல்லூர் திருச்சில் இருந்து 7k.m தொலைவில் உள்ளது , இதன் பயண தூரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் , திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களும் இயக்க படுகின்றன , கரூர் , ஈரோடு , passanger ரயில்கள் இங்கு நின்று செல்லும் , திருச்சில் இருந்து முதல் ரயில் நிறுத்தமே முத்தரசநல்லூர், பேருந்து மார்க்கமாக வருபவர்கள் ஜீயபுரம் , முக்கொம்பு , பேட்ட வாய் தலை , குளித்தலை ஆகிய பேருந்துகள் மூலமாக முத்தரசநல்லூர் வந்தடையலாம் .சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தரசநல்லூர் வருவதற்கு தற்போதைய பேருந்து கட்டணம் 3 ரூபாய் , ரயில் கட்டணம் 3 ரூபாய் , ஆட்டோ கட்டணம் 70 ரூபாய் ஆகும் .
முத்தரசநல்லூர் பயண விவரங்கள்
தொகுமுத்தரசநல்லூர் திருச்சில் இருந்து 7k.m தொலைவில் உள்ளது , இதன் பயண தூரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் , திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களும் இயக்க படுகின்றன , கரூர் , ஈரோடு , passanger ரயில்கள் இங்கு நின்று செல்லும் , திருச்சில் இருந்து முதல் ரயில் நிறுத்தமே முத்தரசநல்லூர், பேருந்து மார்க்கமாக வருபவர்கள் ஜீயபுரம் , முக்கொம்பு , பேட்ட வாய் தலை , குளித்தலை ஆகிய பேருந்துகள் மூலமாக முத்தரசநல்லூர் வந்தடையலாம் .சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தரசநல்லூர் வருவதற்கு தற்போதைய பேருந்து கட்டணம் 3 ரூபாய் , ரயில் கட்டணம் 3 ரூபாய் , ஆட்டோ கட்டணம் 70 ரூபாய் ஆகும் .
முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
தொகுமுத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு : முத்தரசனல்லுரை ஆட்சி செய்து வந்த முத்தரசன் என்ற மன்னர் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார் அதனால் அவர் தினமும் அதிகாலையில் முசிறி அருகே உள்ள திரு ஈங்கோய் மலைக்கு சென்று ஈங்கோய் நாதரையும் பின்பு குளித்தலை அருகே உள்ள கடம்பவநேஸ்வரரையும் அதன் பின்பு சுவாமி மலைக்கு சென்று ரத்னக்ரிஸ்வரரையும் வணங்கிய பின்பு தான் தனது அன்றைய வேலைகளை தொடங்குவர், அனால் அவருக்கு வயதான பின்பு தினமும் அதிக தூரம் சென்று இம்மூன்று சிவபெருமானையும் வழிபட முடியவில்லை எனவே இந்த மூன்று கோவில்களிலும் மண் எடுத்து வந்து முத்தரசனல்லுரில் சிவன் கோவிலை கட்டினான், இந்த கோவிலின் சிறப்பே இந்த கோவிலில் திரு ஈங்கோய் மலை ஈங்கோய் நாதர, கடம்பவநேஸ்வரரையும் மற்றும் சுவாமி மலை ரத்னக்ரிஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்களும் ஒரே இடத்தில இருப்பதுதான்.