பேச்சு:யமத்தா நோ ஒரொச்சி

தலைப்பை யாமாடா நொ ஒரோச்சி என மாற்றலாமா? ஆங்கில விக்கியைப் பார்த்த பின் தான் இக்கேள்வியைக் கேட்கிறேன். ஆங்கிலத்திலே Yamata no Orochi என குறிக்கப்பட்டுள்ளது. யாப்பானிய எழுத்தைப் பர்த்தாலும் இரு வேறு எழுத்துக்கள் தெரிகின்றன (Yamata no Orochi). இவை இரண்டையும் ரகரம் இட்டுக் காடுவது பொருந்தவில்லை. --C.R.Selvakumar 22:03, 2 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

八俣の大蛇 என்பது தான் யப்பானியவிக்கியில் இக்கட்டுரையின் தலைப்பு. இது, 八俣--の--大蛇 முன்று பகுதிகளாக பிரித்து நோக்கப்படல் வேண்டும். இது "யமத்தா நோ ஒரொச்சி" என வாசிக்கப் பட வேண்டும்.(யாமாடா, யமாரா இரண்டுமே பொருத்தமில்லை)

八--ய --எட்டு 俣--மத்தா-பிரிவுகள் の--நொ 大蛇-- ஒரொச்சி 大--பெரிய 蛇-- பாம்பு (சுறுக்கமாக இராட்சத எண்தலை பாம்பு)


யப்பானிய மொழியில் タ என்பதை ஆங்கிலத்தில் எழுதும் போது ta என பாவிப்பது வழக்கமாகும்.அதயே ஆங்கில விக்கியில் பாவித்துள்ளானர். எனினும் இவ்வெழுத்து யப்பானிய மொழியில் "ட/டா த/தா" என அது வாசிக்கப்பட மாட்டாது மாறாக "த்தா" எனவே வாசிக்கப்படும். ஆகவே பெயரை யமத்தா நோ ஒரொச்சி என மாற்றலம்.--டெரன்ஸ் \பேச்சு 04:30, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

டெரென்ஸ், மிக்க நன்றி. தங்கள் பரிந்துரையின் படியே மாற்றியுள்ளேன். --C.R.Selvakumar 13:20, 3 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யமத்தா_நோ_ஒரொச்சி&oldid=68398" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யமத்தா நோ ஒரொச்சி" page.