பேச்சு:ரேடியம்
ஒட்சியேற்றல் என்றால் என்ன? oxidation ஆ?--C.R.Selvakumar 02:53, 12 ஜூலை 2006 (UTC)செல்வா
- OXIDATIONன் தமிழாக்கம்:
- உயிரியவேற்றம் = உயிரியம் + ஏற்றம்
தனிமங்களுக்கு தமிழ்ப் பெயர்களை உருவாக்கும் முயற்சியை வரவேற்கிறேன் என்றாலும், தற்பொழுது விக்கிபீடியாவில் இது குறித்த முயற்சியின் விளைவுகள் குறையுடையனவாகத் தான் தோன்றுகிறது. oxygen - பிராண வாயு - உயிரியம் என்பது போல் தமிழ்ப்படுத்துவது சரியாகப்பட இல்லை. உயிருக்கு இன்றியமையாததாய் இருப்பது ஆக்சிஜனின் பண்புகளில் ஒன்று தான். ஆனால், அதை கொண்டே அதை அடையாளம் காண வேண்டுமா? முறையாக அறிவியல் பயிலும் மாணவன், அதன் அனைத்துப் பண்புகளையும் அறியப்போவது நிச்சயம். அப்படியிருக்க பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பது அவ்வளவு பயன் தருமா என்று தெரியவில்லை. உயிரியம் என்று தமிழில் சொன்னாலும், O என்று குறியையும் பழகத் தான் வேண்டும். எனவே எப்படியும், ஆக்சிஜன் என்ற சொல்லை பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை. ஆக்சிஜன் இல்லாமல் கூட உயிர்கள் வாழ முடியுமே (anaerobes)? sulphur di oxideஐ கொண்டு சில நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்பதால் அதையும் உயிரியம் எனக் குறிப்பிட முடியுமா? ஆக்சிஜன் என்றே வழங்குவது ஆக்சைடு போன்ற பிற பதங்களுக்கு வழிவகுக்கும். உயிரியம் என்று கொண்டால் ஆக்சைடை எப்படி அழைப்பது? --ரவி 13:03, 20 செப்டெம்பர் 2006 (UTC)
தனிமங்களுக்குத் தமிழ்ப்பெயர் காட்டலாம், ஆனால் பல மில்லியன் கணக்கில் வேதியயற் பொருட்கள் பல்வேறு வகைகளில் கூட்டுப்பெறுவதால், அனைத்துல மொழிநடைக்கு ஏற்றார் போல ஆக்ஸிஜன் (அல்லது ஆக்சிசன்), நைட்ரஜன், ட்ங்ஸ்ட்டன் போன்ற ஆங்கில சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. வேதியல் கலைச்சொற்களை நாம் தயங்காது எடுத்தாள வேண்டும். டையாக்சைடு, ஹெக்சா ஃபுளூரைடு (நான் ஃவுளூரைடு என்பேன் ) முதலிய பன்னூறாயிரம் வழிகளில் வருவன. தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு, கரி > கரிமம் முதலிய அடிப்படை பழம் தனிமங்களுக்கு மட்டும் தமிழ்ச்சொற்கள் ஆளலாம். ஈய சல்பைடு (சல்ஃவைடு), வெள்ளிக் குளோரைடு என்று குறிக்கலாம், ஆனால் டங்ஸ்ட்டன் சிலிசைடு என்பதை மெல்லிழைய மண்ணியகம் என்பது போல சொல்லுவது குழப்பங்கள் வருவிக்கும். மிகப்பரவலாக வழிமுறைகளும் வகுக்க வேண்டும். இது தேவை இல்லை என்பது என் கருத்து.
நீலிரும்பு முதலிய சொற்களை பிறைக்குறிகளுக்குள் இட்டுக் காட்டலாம் ஆனால் கட்டுரைத்தலைப்பாக இருப்பது நல்லதில்லை என்பது என் கருத்து. 1970களில் எல்லா தனிமங்களுக்கும் நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டன. வேதியல் கூட்டுப்பொருட்களுக்கும் முறைப்படி தமிழ் வழக்குகள் கொண்டுவரலாம். என்னால் தெளிவாக காட்ட இயலும், எனினும் , இவை வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். விளக்கங்கள் தமிழில் இருக்கலாம், பிறைக் குறிகளுக்குள், இணையான தமிழச் சொற்களைக் காட்டலாம், ஆனால், அனைத்துல முறையோடு ஒட்டி நடப்பதே பயன் பெருக்குவது என்பது என் கருத்து. ரவிக்கு ஒரு கருத்து. ஒரு பொருளுக்குப் பெயரிடும் பொழுது, அப்பொருளைக் குறிக்க ஏதேனும் ஒன்றை வைத்துப் பெயரிடல் மரபு. கருப்பாய் இருப்பதால், கரி, ஆனால் கருப்பாய் இருப்பது கரி மட்டும் இல்லை, கருப்பாய் இருப்பது மட்டும் கரியின் பண்பும் இல்லை. நாற்காலி என்றால் நான்கு கால்கள் கொண்ட ஒர் இருக்கை, ஆனால் நாற்காலி மட்டும் நான்கு கால்களைக் கொண்டிருக்க வில்லை (ஆடு மாடுகளும் கொண்டுள்ளன). எனவே சொல்லாக்க மரபுகளை அறிந்திருத்தல் நல்லது. யானையும் கருப்பாய் இருப்பதால் தம்ழில் அதனையும் கரி என்னும் சொல் குறிக்கும். சொற்பொருள் வளர்வதும் சொற்பொருள் மரபுகளும் மொழிக்கு மொழி சற்று வேறுபடும். ஆனால் சொற்பொருள் மரபுகளில் தமிழ் மிக வளர்ந்த நிலையில் உள்ள ஒரு மொழி. இத்னை விரித்தால் மிக நீளும். Semantic conventions தமிழில் மிக அழகாக வளர்ந்து மிகப்பெரும் வரலாறு கொண்டது. --C.R.Selvakumar 13:37, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
செல்வா, கலைச்சொல்லாக்க வழிமுறைகள் நான் அறிந்திராத ஒன்று. தமிழில் இது குறித்த வழிகாட்டல் நூல்கள் குறிப்பிடவும். பெற்று கற்றுக்கொள்ள முனைவேன். தமிழில் கலைச்சொல்லாக முயற்சிகள், வழிமுறைகள், குறைபாடுகள், முரண்கள் ஆகியவை குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை போல் ஆக்கி விக்கிபீடியாவிலோ வலைப்பதிவுகளிலோ தந்தால் வளர்ந்து வரும் தமிழார்வம் உடைய எங்களை போன்றோருக்கு உதவியாக இருக்கும். மற்றபடி, அறிவியல் கலைச்சொல்லாக்கங்களில் உலக நடப்பை ஒட்டி செயல்படுவதே வளர்ச்சிக்கு உகந்ததாய் இருக்கும் என்பதை நானும் ஏற்கிறேன். நன்றி. --ரவி 13:48, 20 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, தேவநேயப்பாவாணர் அவர்களின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பொதுவாகப் பயன்படும். கலைச்சொல்லாக்கத்திற்கு என்று ஏதும் தனியான விரிவான முறைகள் ஏதும் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றனவா என்று தெரியவில்லை. வழக்கில் உள்ள சொற்களின் அமைப்பைக் கொண்டுதான் பிற கலைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. முயன்றால் இது பற்றி ஆராய்ந்து கட்டுரை எழுதலாம். பொதுவாக வினைச்சொல், பெயர்ச்சொல், உரிச்சொல் முதலியனவற்றைக் கொண்டு, இலக்கண பின்னொட்டு, முன்னொட்டுக்களைக் கொண்டு சொற்கள் ஆக்கப்படுகின்றன. ஒரு நல்ல தமிழ் அகரமுதலி இருப்பது நல்லது. இருந்தால் ஐ என்பதற்கு தொழிற்பெயர் விகுதி என்னும் பொருள் இருப்பதை அறியலாம். இந்த semantic conventions பற்றி (பொருள் தொடர்பால் சொல் கிளைக்கும் மரபு பற்றி) எழுதவேண்டும் என்று நெடுங்காலமாய் எண்ணியுள்ளேன், எனினும் ஏதும் செய்திலேன். --C.R.Selvakumar 03:51, 22 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா