பேச்சு:லிட்டர்

இக்குறுங்கட்டுரையை லீட்டர் (லிட்டரா? லீட்டரா) என்ற கட்டுரைக்கு வழிமாற்றி லீட்டரை முன்னிலைப்படுத்தி ஒரு விரிவான கட்டுரையை எழுதலாம் என வழி மொழிகிறேன்.--Kanags \பேச்சு 20:27, 29 மார்ச் 2008 (UTC)

செய்யலாம் கனகு. லீட்டர் என்று தலைப்பிட்டு, லிட்டர் என்பதற்கும் வழிமாற்று கொடுத்து விடலாம். அடிப்படை அலகுகள் கட்டுரைகள் எழுதப்படாமல் இன்னும் இருக்கின்றன. எழுதுவோம்! --செல்வா 01:52, 30 மார்ச் 2008 (UTC)

நாம் பரவலாகக் காணும் எழுத்துக்களிலும், பேச்சுகளிலும் ’லிட்டர்’ என்ற முறையிலேயே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. வேற்று மொழிகளில் ‘லீட்டர்’ என்று உச்சரிக்கப் பட்டாலும், தமிழில் பரவலாக உச்சரிக்கப்படும் ‘லிட்டர்’ என்பதை முதன்மைத் தலைப்பாகக் கொள்வதேச் சிறந்ததாகும். --தாமரைப்பூ 23:13, 1 ஏப்ரல் 2009 (UTC)

லிட்டர் என்று தலைப்பை மாற்றலாம். எனக்கு மறுப்பு ஏதும் இல்லை.--செல்வா 05:14, 2 ஏப்ரல் 2009 (UTC)
தமிழகத்தில் லிட்டர் என்கிறார்களா? உலகப் பொது வழக்கு (ஈழ வழக்கும் கூட) லீட்டர் தான் சரியானது. எனவே பழையபடி லீட்டருக்கு மாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன். தமிழக வழக்கு என்றாலும் தொடர்ந்து நாம் பிழையாக உச்சரிக்க வேண்டுமா? வெளிநாட்டுக்கு செல்லும் தமிழர்கள் தொடர்ந்து லிட்டர் (litter) என்பார்களானால் வேறு விதமாக அர்த்தப்படுத்தி விடுவார்கள்:)--Kanags \பேச்சு 09:52, 2 ஏப்ரல் 2009 (UTC)
எனக்கு லீட்டர், லிட்டர் இரண்டுமே ஏற்பு. மேலும் மில்லி Litre என்னும் பொழுது லீட்டர் என்று இருந்தால் மிலீ என்றே எழுதலாம். மிலி என்று எழுதினால் குழப்பம் வரும். லீட்டர் என்பது ஆங்கிலத்தில் சரியான ஒலிப்பு, நாமும் அதனையே ஏற்றுக்கொள்ளலாம். மற்ற பயனர்கள் கருத்து தெரிவித்தால், முன்பிருந்தவாறே மாற்றிவிடலாம். பயனர் தாமரைப்பூ வேண்டியதால் மாற்றினேன்.மீண்டும் லீட்டருக்கே மாற்றலாமா? (லிட்டர் என்பது மாற்றுவழியாக இருக்கும், அப்படித் தேடுவோர்க்கும் கிட்டும்).--செல்வா 12:38, 2 ஏப்ரல் 2009 (UTC)
நான் பார்த்தவைக், கேட்டவைகளைக் கருத்திற்கொண்டு மேற்கண்ட விருப்பத்தைத் தெரிவித்தேன். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய ஆங்கிலத்திலும் லிட்டர் என்றே உச்சரிக்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பான்மைப் பயனர்களுக்குச் சரியென்றுத் தோன்றும் சொல்லையேப் பயன்படுத்தலாம். --தாமரைப்பூ 17:27, 2 ஏப்ரல் 2009 (UTC)

தமிழ்நாட்டில் லிட்டர் என்பதே பேச்சு, எழுத்து வழக்கில் உள்ளது. இந்த ஒரு கட்டுரை குறித்து மட்டும் உரையாடாமல் விக்கிப்பீடியா கொள்கை முடிவு நோக்கி உரையாடலாம். சரியான உச்சரிப்பு, தமிழர் உச்சரிப்பு வழக்கில் இருந்து மாறியதாயும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுத வல்லதாயும் இருக்கையில் எதை முன்னிறுத்த வேண்டும்?--ரவி 18:09, 2 ஏப்ரல் 2009 (UTC)

  • பரவலாகப் பயன்படுத்தும் முறையே அறிவுக்களஞ்சியத்திலும் இடம்பெறவேண்டுமா? லீட்டர் என்பது ஆங்கிலத்தில் பலுக்கப்படும் முறை (http://ta.wiktionary.org/wiki/litre ; http://www.thefreedictionary.com/litre), அது தமிழுக்கு ஒவ்வாது என்று லிட்டர் பயன்படுத்த முனைந்தால் இதுவும் ஒவ்வாது என்று கருதுகிறேன், ஏனெனில் லகர வரிசையில் தமிழில் சொற்கள் தொடங்குவதில்லையல்லவா? எனவே இலிட்டர் அல்லது இலீட்டர் என அழைத்தலே முற்றிலும் பொருந்தக்கூடியது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
  • (லிட்டர்; லீட்டர்; லீற்றர், லிற்றர்; இலீட்டர்; இலீற்றர்; இலிட்டர்; இலிற்றர்)
மேலே உள்ளவற்றில் இலிட்டர் என்பதனை த.இ.ப பயன்படுத்துகின்றனர். http://www.tamilvu.org/courses/hg300/hg309/html/hg309c04.htm

--சி. செந்தி 02:01, 26 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லிட்டர்&oldid=637611" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லிட்டர்" page.