பேச்சு:வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
தலைப்பில் அருள்மிகு தேவையில்லை என்று நினைக்கிறேன்--ரவி 06:15, 20 மே 2008 (UTC)
- இது கோயிலின் சமசுகிருதமயப்ப்படுத்தப்பட்ட பெயர். கோயிலின் உண்மையான பெயரைக் குறிப்பிட்டு முதன்மைப்படுத்த வேண்டிக் கொள்கிறேன். - கோபி
கோபி, இந்தக் கோயிலுக்கு என்றில்லை எல்லா கோயிலுக்கும் ஸ்ரீ, அருள்மிகு என்று முன்னொட்டு இட முடியும். இடுகிறார்கள். பொதுவாக, விக்கிப்பீடியாவில் எந்தக் கோயிலுக்கும் இத்தகைய முன்னொட்டு தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த முன்னொட்டு இரு தலைப்புகளை வேறுபடுத்துவதில்லை. எல்லா கோயிலுக்கும் அருள்மிகு என்று முன்னொட்டு இட்டால் அகர வரிசைத் தேடலில் கண்டுபிடிக்க உதவாது. எல்லா நபர்களுக்கும் திரு என்று முன்னொட்டு இட்டு தலைப்பு வைப்பது போலவே என்னால் நோக்க முடிகிறது.--ரவி 06:40, 20 மே 2008 (UTC)
- ரவி, நான் அருள்மிகு என்பதைக் குறிப்பிடவில்லை. சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம் என்பது சமசுக்கிருதமயமாக்கப்பட்ட பெயர். பாரம்பரியமாக இருந்து வந்த கோயில்கள் எவற்றுக்கும் இவ்வாறு பெயர்கள் ஆரம்பத்தில் இல்லை. பின்னர் உருவாக்கினார்கள். கண்ணகி கோயிலகள் இராஜராஜேஸ்வரி தேவஸ்தானமாகியதை எனது ஊரில் கண்டேன். அதுபோலவே இப்பெயரும் மாறியிருக்க வேண்டும் என்றே படுகிறது. மக்கள் அழைக்கும் பெயர் ஒன்று எப்படியும் இக்கோயிலுக்கு இருக்கும். அப்பெயரைக் குறிப்பிட்டு முதன்மைப்படுத்த வேண்டும். நன்றி. - கோபி
இக்கோயில் கண்ணன் கோவில், கிருசுணர் கோவில், விசுணு கோவில் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது என்று கட்டுரையில் தரப்பட்டுள்ளது. எது எப்படியிருப்பினும் தற்போதுள்ள பெயரே தலைப்பிலிட வேண்டும். வவுனியா சிறீதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில் எனத் தலைப்பிடலாம்.--Kanags \பேச்சு 07:13, 20 மே 2008 (UTC)
அருள்மிகு போன்ற மரியாதைச் சொற்களை கோயில் போன்ற தலைப்புகளில் இடுவது தவறில்லை எனபது என் கருத்து. (வடமொழியா தமிழா என்பதை நான் கதைப்பதை தவிர்க்கிறேன்) --Terrance \பேச்சு 07:19, 20 மே 2008 (UTC)
மன்னிக்கவும் கோபி. உங்கள் கருத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டேன். கனகு சொல்லும் பெயரைத் தற்போது முதன்மைப்படுத்துவோம். நீங்கள் சொல்வது பழமையான தமிழ்ப் பெயர் இருப்பதை ஈழத்துப் பயனர்கள் கண்டு சொன்னால் அதை முதன்மைப்படுத்தலாம்.
தெரன்சு, இங்கு தமிழ் - வடமொழிப் பிரச்சினை இல்லை. அருள்மிகு, ஸ்ரீ இரண்டுமே தலைப்பில் தேவையில்லை. கட்டுரைக்குள் தருவதை நான் எதிர்க்கப்போவதில்லை. 1. அருள்மிகு என்று சொல்வதில் ஒரு அறிவார்ந்த கலைக்களஞ்சியத்துக்கு உரிய objectivity இல்லை. 2. ஆயிரக்கணக்கான கோயில்கள் எல்லாம் அருள்மிகு என்றே தொடங்கும் என்றால் அகரவரிசைத் தேடலுக்கு உதவாது. இவ்விரு விசயங்களையும் சிந்தித்துப் பார்க்கலாம்--ரவி 07:22, 20 மே 2008 (UTC)
கோயிலின் பெயர்கள் மாறிய வரலாற்றைத் தலைப்பிடுகையில் கவனத்திலெடுக்க வேண்டியதில்லைத்தான். ஆனால் தற்போதுள்ள பெயர் என்பது கோயில் நிர்வாகத்தினர் சூட்டிய பெயரா அல்லது மக்கள் அழைக்கும் பெயரா என்பதிலேயே என் குழப்பம்.
நல்லூர் சட்டநாதர் கோயில் என்று மக்களால் அறியப்படும் கோயிலுக்கு நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோயில் என்றா பெயரிட வேண்டும் என்று முன்னரும் ஒரு சிறு உரையாடல் நடந்தது. வசந்தா வைத்தியநாதன் எழுதிய ஈழத்துச் சிவாலயங்கள் நூலை நான் வாசிக்கவில்லை. ஆனால் உமாபதி அதனை ஆதாரமாகக் கொண்டு சில கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகளைப் பார்த்த அளவில் குறித்த நூல் சமசுகிருதமயமாக்கப்பட்ட பெயர்களை முன்னிறுத்துவதாகப் பட்டது.
குறைந்தபட்சம் கட்டுரையின் ஆரம்பத்திலேயே மக்கள் அழைக்கும் பெயர்களைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கலாம். நன்றி. - கோபி
கோபி, உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். மக்கள் வழங்கும் பெயரை, அதுவும் தமிழ்ப் பெயராக இருக்கும் பட்த்தில், கண்டிப்பாக முதன்மைப்படுத்தலாம். --ரவி 10:45, 20 மே 2008 (UTC)
- இங்கே பேசலாமே எல்லா கட்டுரைக்கு ஒரு பொது முடிவை எட்ட உதவியாக இருக்கும்.--Terrance \பேச்சு 07:39, 20 மே 2008 (UTC)
தெரன்சு, மரியாதைச் சொற்கள் என்று பொதுமைப்படுத்தி உரையாடுவது மிக விரிவான உரையாடலாக இருக்கும். இது போன்று தொடர்ப்புடைய ஒவ்வொரு சூழல்களிலும் தனித்தனியாக உரையாடி, பிறகு முடிவுகளை அங்கு சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். தலைப்பில் அருள்மிகு விடுக்க மேலும் சில காரணங்கள்: 1. மக்கள் பேச்சு வழக்கிலும் அருள்மிகு, சிறீ போன்ற முன்னொட்டுகள் வருவதில்லை. சிவன் கோயில், மாரியம்மன் கோயில், முருகன் கோயில் என்றே அழைக்கிறார்கள். மக்களே அருள் என்ற சொல் விடுத்து அழைப்பதால், நாமும் அப்படி எழுதுவதால் மட்டும் மரியாதைக் குறைவு நேரப் போவதில்லை. 2. தலைப்பை இயன்ற அளவு சுருக்கமாகவும் நேரடியாகவும் துல்லியமாகவும் வைக்க வேண்டும். அருள்மிகு என்ற முன்னொட்டு எந்த விதத்திலும் இரண்டு ஒரே பெயருடைய கோயில்களை வேறுபடுத்திக் காட்ட உதவுவதில்லை. 3. கோவில் என்பது மட்டுமே உண்மை. அதற்கு அருள் இருக்கிறதா இல்லையா என்பது கேள்விக்குரியது. அருள்மிகு என்ற சொல் அச்சமயத்தை, கோயிலைப் பின்பற்றுவோரின் நம்பிக்கை சார்ந்தது. அதை உறுதிப்படுத்த வழியில்லை. எனவே, உள்ளது உள்ளபடி உரைத்தல், நடுநிலை பேணல் என்ற வகையில் அருள்மிகு என்ற சொல்லைத் தவிர்க்கலாம். (முருகன் குறித்த கட்டுரையில், முருகன் சிவனின் பிள்ளை என்று இந்து சமயத்தவரால் நம்பப்படுகிறது என்று எழுதுகிறோமே தவிர, முருகன் சிவனின் மகன் என்று உண்மை போல் எழுதுவதில்லை. ). இதே காரணங்களை ஒட்டி, கட்டுரையின் உள்ளும் அருள் மிகு என்ற சொல்லைத் தவிர்க்கலாம். ஆனால், அதனை வலிந்து பரிந்துரைக்க விரும்பவில்லை. --ரவி 10:45, 20 மே 2008 (UTC)
- சரி ரவி அப்படியே செய்யலாம். இம்மாதிரியான சொற்கள் (அருள்மிகு....) கட்டுரைத் தலைப்புகளின் வருவதை தவிர்க்க வேண்டும் என்றவாறு ஒரு முடிவை எடுத்து அதை விக்கிபீடியாவில் செய்ற்படுத்துவோம். --Terrance \பேச்சு 11:59, 20 மே 2008 (UTC)