பேச்சு:வாதிரியார்

வாதிரியார் பற்றிய குறிப்புகள்

தொகு

“உழு தொழில் வல்ல #மள்ளர் #கோலிய வுறிவி னாக்கம்“

எனத் தொடங்கும் தியாகராயலீலைச் செய்யுள் (101) மள்ளர்களின் உழு நேர்த்தியை நெசவோடு உவமிக்கும். இதனை முனைவர் குருசாமி சித்தர் “தமிழ் இலக்கியத்தில மள்ளர், தேவேந்திர குல வேளாளர்” எனும நூலில் (பக்கம் 114) கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். “உழவுத் தொழில் வல்லுநர்களான மள்ளர் இனத்தார் செழிப்பான நிலத்தை வளாவெடுத்த புதுத் துணி நெய்வது போல் உழுது சம்பாதிக்கின்றனர்”

இவர்களைதான் பழனி செப்புபட்டையத்தில் நெசவு செய்யும் வாதிரியார் உற்பத்தி செய்யும் துணியை சாயம் ஏற்றுபவர் வாதிரியாரின் உட்பிரிவு "சாயப்பள்ளன்" என்று கூறுகிறது. இவர்கள் தாமிரபரணி ஆற்றாங்கரையில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உழவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கலை சீரும் சிறப்புமாக வழிபட்டு வருகின்றனர், இவர்கள் தங்களை கோழியப்பள்ளர் என்றும் சொல்வர். இவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் மிகவும் சிறப்புக்குரியவை.

சூடாமணி நிகண்டு இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி, செய்யுள் 120 ல் கீழ்கண்ட விளக்கம் இடம்பெற்றுள்ளது. (இது கிள்ளி என்ற சோழ மன்னனை பற்றியது) கோழி = கோழியூர் = உறையூர், வேந்தன் = அரசன் கோழிவேந்தன் = உறையூரை தலைநகரமாக கொண்ட அரசன் இந்த உறையூர் என்பது சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

இங்கு வாழ்ந்த சோழியபள்ளர்தான் கோழியபள்ளராக மருவியுள்ளார்கள் என எழுத்தாளர் தமிழ்மாறன் கூறுகிறார்.

பேராசிரியா் நா. வாணமாமலை

“பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வௌ்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வௌ்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வௌ்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்” (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14)

சுதன் மாரியப்பன் (பேச்சு) 04:16, 16 ஆகத்து 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாதிரியார்&oldid=3775464" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாதிரியார்" page.