பேச்சு:விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு

இதன் தலைப்பு விடுதலைப் புலிகள் பலாத்காரமாக ஆள்சேர்ப்பதாகக் குற்றச்சாட்டு என மாற்றப்படல் வேண்டும்.--Kanags 12:18, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

இலங்கை இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை என்றாலும் இலங்கை முப்படைகளில் சேர்ந்த ஒருவர் எக்காரணம் கொண்டும் அவ்வமைப்பில் இருந்து நீங்குவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு இராணுவத்தில் இருந்து தப்பியோடியர்களும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு முப்படைகளில் பலாத்காரமாகப் படைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவையும் மனித உரிமை மீறல்களே. --Umapathy 12:43, 1 ஆகஸ்ட் 2007 (UTC)


செய்தியின் படி தகுந்த ஆதாரங்கள் இருப்பதகாத்தான் தெரிவித்துள்ளது. எனவே இதை ஒரு வெறும் குற்றச்சாட்டு என்று மட்டும் சொல்ல முடியாது. மேலும், கட்டுரையில் புலிகள் தரப்பு நியாப்படுத்தலும் சுட்டப்பட்டுள்ளது, எனவே தலைப்பு மாற்றம் தேவையில்லை, அது கனத்தைக் குறைக்கும் என்றே நினைக்கின்றேன். அப்படியென்றால் இலங்கை அரசு செய்யும் அட்டூளியங்களைப் பற்றிய செய்திகளையும் குற்றச்சாடு என்ற அடைமொழியுடந்தான் இடவேண்டியிருக்கும். பிற பயனர்களும் தலைப்பு மாற்றத்தை விரும்பின், எனக்கு மேலதிக ஆட்சோபனைகள் இல்லை. --Natkeeran 23:47, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

அப்படியானால் எனக்கு ஆட்சேபனை இல்லை.--Kanags 07:59, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

வீட்டுக்கொருவர் கட்டாயம் போராட்டத்தில் இணைய வேண்டுமென புலிகள் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். இதை புலிகள் ஒருபோதும் மறுத்ததில்லை. வீட்டில் தனிப்பிள்ளையாக இருப்பவர்கள் இந்த ஆட்சேர்ப்பிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். அதையும் புலிகள் அறிவித்துள்ளதோடு நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு வெளியிட்ட வெளிப்படையான அறிவித்தல் அவர்களின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகளில் வந்துள்ளது.--வசந்தன் 13:02, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

வசந்தன், சிங்கள பேரினவாத அரசுகள் தன்னிச்சையாக சட்டம் இயற்றி தமிழ் மக்களைப் பாதித்தது என்று ஆரம்பித்த ஈழப்போராட்டம், இயக்கங்கள் தன்னிச்சையாக சட்டங்கள் இயற்றுவதை எப்படி நியாப்படுத்துவது? தமிழ் மக்களின், தனி மனிதர்களின் மனித உரிமைகளை உறிதியாக பேண உத்தரவாதம் தர மறுக்கும் இயக்கங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு முரண். நிறுத்துக. அதைப் பற்றி வேறு களங்களில் உரையாடிக்கொள்ளலாம். நன்றி. --Natkeeran 23:29, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

சிறிலங்கா இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில்லை என்ற குறிப்போடு சேர்த்து, இன்னின்ன நாடுகளில் கட்டாய இராணுவசேவை நடைமுறையிலிலுள்ளது என்பதையும் ஒரு தகவலுக்காகக் குறிப்பிட்டால் என்ன? ;-)--வசந்தன் 13:04, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

விளக்கத்திற்கு நன்றி வசந்தன். தலைப்பை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு என மாற்றலாமா? (தமிழ்ப் படுத்தலுக்காக மட்டுமேயன்றி வேறு நோக்கிற்காக அல்ல:)--Kanags 13:16, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

"ஆட்சேர்ப்பு" என்பது தான் என் தெரிவு. நீங்கள் சொன்ன தலைப்பே சரியாகப் படுகிறது.--வசந்தன் 13:25, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

பலாத்காரமாக என்பது தமிழ் இல்லையா? கட்டாய என்பது சற்று கனம் குறைவு. என்றாலும் பரிந்துரைப்படி கட்டுரைத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. --Natkeeran 23:29, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

நற்கீரன், பலாத்காரம் என்பது தமிழ்ச்சொல்லல்ல என்று நினைக்கிறேன். கட்டாயம் என்பது கனம் குறைவுதான். சு. ப. தமிழ்ச்செல்வன் அச்செய்தியை (அஃது, பலாத்காரமாக என்பதனை) மறுத்திருக்கிறார். இதனாலேயே குற்றச்சாட்டு என்பதனைத் தலைப்பில் சேர்க்கலாம் என்றேன்.--Kanags 07:54, 3 ஆகஸ்ட் 2007 (UTC)

வலுக்கட்டாயமாக என்று சொல்வது கூடுதல் கனம் தருமா?--ரவி 23:44, 3 ஆகஸ்ட் 2007 (UTC)

Start a discussion about விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு

Start a discussion
Return to "விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு" page.