பேச்சு:விதைப்பவனும் விதையும் உவமை
டெரென்ஸ், சில மாற்றங்கள் செய்துள்ளேன். அவை சரியா என்பதைப் பார்க்கவும். பொருள் பிறழ்வு ஏதும் இருந்தால் திருத்தவும். விதைக்கிறவனுக்கு என்பதைக்காட்டிலும் விதைப்பவனுக்கு எனில் சிறப்பாக அமையும். இரட்சிப்பு என்பதை எளிதாக காப்பு, காத்தல், புரத்தல், என்று ஏதேனும் நல்ல தமிழில் சொல்லலாம். கா, காப்பாற்று என்பது எல்லோராலும் உணர்ந்து கொள்ளகூடிய சொற்கள். King என்பதற்கு காவலன், புரவலன் என்று தமிழில் கூறுகிறோம் இல்லையா?--C.R.Selvakumar 12:44, 10 ஜூலை 2006 (UTC)செல்வா
பக்கத்தை நகர்த்தி விட்டேன் பார்க்கவும். இதில் நீங்கள் செய்த் மாற்றங்கள ஏற்கிறேன் எனினும் salvation என்பத்ற்கு இரட்சிப்பு என்பது பொது கிறிஸ்தவ வழக்கு. காப்பு, காத்தல், புரத்தல் போன்றவை சரியாக பட்டாலும் "இரட்சிப்பு" என்ற சொலிலுள்ள கம்பீரம் இல்லை என்பது என் கருத்தாகும்.
இது போல் தினகரன்,பேர்க்மன்ஸ், போன்ற பல தமிழ் கிறிஸ்தவர் ஏற்படுத்திய வழக்காகும்.......
என்ன செய்யலாம்? --டெரன்ஸ் 13:40, 10 ஜூலை 2006 (UTC)
- பொதுவாக மதம் பற்றிய எழுத்துக்களுக்கு, மதத்தில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர்கள் ஒப்புதல் தரவேண்டும். சில சொற்களுக்கு உட்பொருள்கள் இருக்கும். சில சொற்கள் வழக்கூன்றி, வரலாற்றில் பதிவாழம் பெற்றிருக்கும். எனவே, நான் மிகவும் தயக்கத்துடந்தான் மாற்றங்கள் செய்தேன். பொதுவாக எல்லோரும் அறியும் சொற்களைப் பயன் படுத்தினால், கேட்பவர்கள் உள்ளத்திலே (வேற்று மதத்தவராயினும்) உள்ளத்தில் ஒரு நெருக்கம் உண்டாகும். இரட்சிப்பு என்று கேட்ட உடனேயே, 90% மக்கள், வேறாக உணர்வார்கள். 16-17 ஆவது நூறாண்டுகளிலே, இரட்சிப்பு என்று கூறியிருக்கலாம். இக்காலத்தில் பொருந்துமா என எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும் salvation என்பதின் பொருள் தமிழில் கடையேறுதல், கடைத்தேறுதல் போன்ற சொற்கள் சரியான பொருள் தரும். இரட்சித்தல் என்பது ஆங்கிலத்தில் protection, (not salvation). என்றாலும், தக்கவர்களைக் கொண்டு உறுதி செய்யுங்கள். இரட்சிப்பு என்பது சரியென்றால், இரட்சிப்பு என்றே மாற்றிவிடுங்கள். --C.R.Selvakumar 13:54, 10 ஜூலை 2006 (UTC)செல்வா
- :-))--டெரன்ஸ் 14:20, 10 ஜூலை 2006 (UTC)
Start a discussion about விதைப்பவனும் விதையும் உவமை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விதைப்பவனும் விதையும் உவமை.