பேச்சு:விவாதி
Untitled
தொகுவாசு, இக்கட்டுரையை விரிவாக, தக்க சான்றுகளுடன், எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவீர்கள் என்று நினைக்கின்றேன். எப்படி 12 சுரங்களை 16 சுரங்களாகக் கொள்வதால் இந்த முரண்பாடு தோன்றுகின்றது என்றும், ஆனால் அதிலே எத்தகைய நுணுக்கங்களைக் கையாண்டு முரண்பாட்டைக் குறைத்து, இணக்கம் தேடுகிறார்கள் என்றும் எழுத வேண்டுகிறேன். இசை மேதை டி.ஏ. சம்பந்தமூர்த்தி அவர்கள் "அபஸ்வரமாய்ப் பாடாதே" என்னும் ஒரு கீர்த்தனையைப் பாடி இம் முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார் (என்னிடம் தற்பொழுது இது பற்றிய பல தகவல்கள் இல்லை). இவர் வேங்கட மகியின் 72 மேளகர்த்தா முறையைக் கடுமையாக அறிவடிப்படையில் சாடியவர். இவரை மிகப்பெரும் மேதை என்று திருவாடுதுறை இராசரத்தினம் பிள்ளை முதற்கொண்டு பெரும் இசை அறிஞர்கள் போற்றியுள்ளார்கள்.ஒரு காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயரும், மகாராசபுரம் விசுவனாத ஐயர், சித்தூர சுப்பிரமணியப் பிள்ளை ஆகியோர்களும் 72 மேளகர்த்தாவைத் தவறு என்று எதிர்த்தனர். ஆனால் செம்மன்குடியார் போன்ற சிலர் பின்னர் ஏதோ காரணங்களுக்காக 72 மேள முறையை ஆதரிக்கத் தொடங்கினர். சுரங்கள் 12 அல்லது 22 அல்லது அது போன்ற சீரான முறைப்படி இருப்பதுதான் சரியானது என்னும் நடைமுறைக்கு மாறான கருத்துடையவன் நான் ஆகவே இப்படி முரண் குற்றம் (விவாதி தோ^சம்) பற்றியெல்லாம் விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவன் :)--செல்வா 15:04, 16 ஜனவரி 2009 (UTC)