பேச்சு:வேதிப் பொறியியல்

Chemical Engineer என்ற முறையில் கட்டுரையினை இயற்றி உள்ளேன். கலைச்சொற்கள் ஆளுமையில் ஏதேனும் தவறு இருப்பின் தெரிவிக்கவும் வினோத் 15:44, 2 டிசம்பர் 2007 (UTC)

பொறியாளர்.. பொறியிலாளர்.. எது சரி ? βινόδ  வினோத் 14:33, 1 பெப்ரவரி 2008 (UTC)

பொறியை ஆள்பவர் (பொறி+ஆள்+அர்=பொறியாளர், ஒப்புநோக்கு: தொழிலாளர், தொழிலாளி, முதலாளி, கடனாளி,..). எனவே பொறியாளர் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.--சிவகுமார் \பேச்சு 14:37, 1 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி, கட்டுரையில் மாற்றிவிடுகிறேன் βινόδ  வினோத் 14:40, 1 பெப்ரவரி 2008 (UTC)

இதை வகையில் scientistஐ அறிவியலாளர் என்பதற்குப் பதில் அறிவாளர் எனலாமா :) ஆனால், ஏற்கனவே அறிஞர் என்று ஒருவர் இருந்து குழப்புவார் :) --ரவி 18:55, 8 ஏப்ரல் 2008 (UTC)

பொறியியல் விக்கித்திட்டம்

தொகு

பொறியியல் விக்கித்திட்டத்தின் பகுதியாக இந்த கட்டுரையை அதிவிரைவில் விரிவாக்கி மேலதிக தகவல்களை இணைத்துவிடுகிறேன் வினோத் ラージャン 17:54, 8 ஏப்ரல் 2008 (UTC)

http://blog.selvaraj.us/archives/category/chem_engg இங்கு சென்று பாருங்கல் தமிழில் தகவல்கள் கிடைக்கும். செல்வராஜ், த.வி பயனராக பதிவு செய்துள்ளார். இரு முறைகளாவது அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம், இருப்பினும் அவர் நேர சிரமம் காரணமாக இன்னும் தீவரமாக பங்களிக்கவில்லை. --Natkeeran 19:26, 8 ஏப்ரல் 2008 (UTC)

அவர் எங்கள் கல்லூரி மூத்தவர் தான். வினோத்தும் நானும் சேர்ந்து நெருக்க வேண்டும் :) --ரவி 23:22, 8 ஏப்ரல் 2008 (UTC)

அட பரவாயில்ல, மொக்க போடறதுக்கு இன்னொரு சீனியர் கிடைச்சச்சு அதுவும் எனது துறையிலேயே (ரவி என்னுடைய பக்கத்து துறை :-( ). ரவியும் நானும் இன்னொரு முறை அழைத்து பார்க்கிறோம், ஜூனியர்கள் என்ற உரிமையில். அன்பால் கட்டுப்பட்டு வந்தாலும் வரலாம் :) வினோத் ラージャン 00:46, 9 ஏப்ரல் 2008 (UTC)
அட, இப்போது தான் இந்தப் பக்கத்தைப் பார்க்கிறேன். வினோத், உங்கள் விக்கிப்பீடியப் பங்களிப்பைக் கொஞ்ச காலம் முன்பே கவனித்தேன். இந்த வயதில் நாங்களெல்லாம் காந்தி மண்டபத்தில் காப்பி டீ குடித்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தோம். உங்களின் ஆர்வமும் உழைப்பும் போற்றற்குரியது. ரவி கூட அப்படித்தான். அவர் நுழையாத இடமே இல்லை போலிருக்கிறது. அண்மையில் கொஞ்சம் சண்டை போட்டுக்கொண்டாலும் :-) அவரது ஆர்வத்தையும் உழைப்பையும் சக்தியையும் மெச்சுகிறேன். சரி இப்போது இங்கு வந்த விசயம் கீழே. --செல்வராஜ் 04:48, 25 ஏப்ரல் 2008 (UTC)
உங்கள் காலத்தில் எப்படியோ, இப்போதெல்லாம் காந்தி மண்டபத்தினுல் நுழைய முடிவதில்லை. அது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் அங்கேயே குழந்தை பெற்றுக்கொள்ளாதது மட்டும் தான் குறை மேற்படி சர்வமும் நடைபெறுகிறது, சிறுவர் பூங்காவிலும் சிறுவர் காணக்கூடாததெல்லாம் நடக்கிறது ஹ்ம்ம்ம் :-((. காந்தி மண்டபமும் சிறுவர் பூங்காவும் யாராவது சென்று வந்தேன் என்றாலே நாங்கள் ஒரு மாதிரி பார்ப்போம் :-)). மேலும் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே அனைத்து

வசதிகளும் இருப்பதால்(IBT வேறு பக்கத்திலே இருப்பது ஆறுதல் :-) ) , நாங்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுற்றிக்கொண்டிருப்பதே வசதியாக இருக்கிறது :-)

மேட்டருக்கு வருகிறேன், தங்களை இந்த கட்டுரையை விரிவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஆங்கில கட்டுரை கூட எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. வேதிப்பொறியியல் நிறை எழுத ஆவல் இருப்பினும், Plug Flow Reactor, Continuos Stirred Tank Reactor, Distributed System, Flux, இன்னும் பல நுட்பவியல் சொற்களுக்கு என்ன தமிழில் எழுதுவது என தெரியாததால் எழுத இயல்வதில்லை(Transport Phenomenon போன்ற dry-ஆன ஆங்கிலத்திலே புரியாத பாடங்களும் இவற்றுள் அடங்கும் :-) ) . முடிந்தால், வேதிப்பொறியியல் கலைச்சொற்கள் கொண்ட ஒரு பட்டியலையும் இயற்ற வேண்டுகிறேன். நன்றி 121.247.218.193 12:18, 25 ஏப்ரல் 2008 (UTC) ( வினோத் )

கலைச்சொற்கள்

தொகு

அண்மையில் இந்தப் பக்கத்தில் இருக்கும் சில கலைச்சொற்களை மாற்றினேன். அது பற்றிய கருத்துக்கள் தேவை. ஏனெனில், பிறகு உலாவிக் கொண்டிருந்தபோது, இன்னும் சில இடங்களில் அதே சொற்கள் இருந்தன. எல்லா இடங்களிலும் ஒன்றையே பாவித்தால் நலம் பயக்கும். இந்த மாற்றங்கள் ஏற்புடையதென்றால் பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று நான் பிற இடங்களில் மாற்றவில்லை.

இயக்கியல், இயங்கியல் என்பவை பல இடங்களில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப் படுகின்றன என்று என் தஞ்சைப்பல்கலை. அகரமுதலி சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. அதன் அடிப்படையில் இவற்றை நான் ஏற்றுக் கொள்ள எண்ணியிருக்கிறேன்

  • statics - நிலைப்பியல்
  • kinematics - இயக்கவியல்
  • kinetics - இயக்கத்தாக்கியல்
  • dynamics - துனைமவியல்
  • mechanics - இயக்கெந்திரவியல்

அதனால், fluid mechanics = பாய்ம இயக்கெந்திரவியல் என்றும், thermodynamics = தெறுமத் துனைமவியல் என்றும் மாற்றியிருக்கிறேன். (இராம.கி தெறும என்பது வெப்பத்தைக் குறிப்பதைப் பற்றி திருக்குறளை மேற்கோள் காட்டி முன்பொரு இடுகை எழுதியிருந்தார்).

கருத்துக்கள்? --செல்வராஜ் 04:48, 25 ஏப்ரல் 2008 (UTC)

உபகரணங்கள் என்பதை ஏந்தம் என மாற்றியதன் காரணம் என்னவோ ? ஏந்தம் என்பது எந்த அகராதியிலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வழிவழியாக சீனியர்களின் தீசிஸ் ரிப்போர்ட்டை பார்த்து காப்பியடிக்கப்படும் தமிழ் திட்டப்பணி சுருக்கத்தில் (முழுவதையும் இதைப்பார்த்துதான் செய்கிறோம் என்பது வேறு விஷயம் :-) ) கூட Equipment Design உபகரணங்கள் வடிவமைப்பு என்றே கூறப்பட்டுள்ளது.

தெறும என்பது தெர்மோ என்ற பதத்தை ஒட்டி வர வேண்டும் என்பதற்காகவே பயன்படுத்தப்பட்டிருப்பது போல் தெரிகிறது, இவ்வளவு மெனக்கெடுவதை விட வெப்ப என்ற சொல்லையே பயன்படுத்தலாம். 121.246.13.116 16:21, 25 ஏப்ரல் 2008 (UTC) ( வினோத் )

நண்பர் இராம.கி அவர்கள் thermal என்பதற்கு தெறும என்னும் சொல்லைப் பரிந்துரைத்ததை அறிவேன், ஆனால், எளிதான சொல்லாகிய வெப்பம் இருக்கும் பொழுது ஏன் தெறும என்னும் சொல்லை எடுத்தாள வேண்டும்? தமிழில் வெய்யில், வென்னீர், வெம்மை, வெப்பம், வெக்கை, வேகு என்று பற்பல சொற்களுக்கு அடிப்படையாக இருக்கும் சொல்லை விலக்குவது தவறு. மேற்கூறிய சொற்களுக்கு இணையான சொற்கள் ஏற்கவவே உள்ளன. பேச்சு:விசையியல் என்னும் பக்கத்தையும் பார்க்க வேண்டுகிறேன். ஜேகே அவர்களுடைய கருத்துகளையும் பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 17:01, 25 ஏப்ரல் 2008 (UTC)
Mechanics = விசையியல்
Classical mechanics = மரபார்ந்த விசையியல்
statics = நிலையியல்
Hydrostatics = பாய்ம நிலையியல்
dynamics = இயக்கவியல்
Thermodynamics = வெப்பஇயக்கவியல்
kinetics = நகரியக்கவியல்
kinematics = நகர்ச்சியியல்
என்று இங்கே ஆள்கிறோம். மாற்ருக்கருத்துகள் இருந்தால் தெரிவியுங்கள்.--செல்வா 17:01, 25 ஏப்ரல் 2008 (UTC)
செல்வா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இக்கலைச்சொற்களைப் பொருத்து எனக்கு ஆணித்தரமான கருத்துக்களில்லை. எனக்கு தெரியாத நிறையச் சொற்களுக்குக் கிடைக்குமிடத்தில் எடுத்துக் கொண்டு வருகிறேன். அவற்றில் சில எனக்குப் பிடித்திருந்தும் விக்கிப்பீடியா போன்ற இடங்களில் பொதுவாகப் பயன்படுத்த முடிவதை ஏற்றுக் கொள்வதில் தயக்கமில்லை. Heat, Thermo/Thermal இரண்டிற்கும் வெப்பம் என்று ஒரே சொல்லைக் கையாள்வதற்குப் பதில் தெறும என்னும் இன்னொரு சொல்லைச் சேர்த்துக்கொள்ளலாமே என்று தோன்றியது. (நிச்சயமாய், வெப்பம்/வெம்மைக்குப் பதிலாக அல்ல; கூடுதலாகத் தான்). நீங்கில் தெறும் - குறித்து இராம.கி கூறியது எனக்கு ஏற்புடையதாகத் தெரிந்தது. இங்கு வெப்பமே வைத்துக் கொள்ளலாம் என்றாலும் சரியே.
பிற சொற்கள் பற்றியும் அதே கருத்துத் தான். அது பற்றி முடிவு செய்திருந்தால் அதை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குப் பொருத்தமின்றித் தோன்றினால் மட்டும் கருத்துக்கள் சொல்லுகிறேன். இப்போதைக்கு ஒரு ஐயம். kineticsக்கு நகரியக்கவியல் என்று வைத்துக்கொண்டால், reaction kinetics போன்றவற்றிற்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. வேதிவினை நகரியக்கவியல்? சரியாய் இல்லையே... வேதிவினை இயக்கத்தாக்கியல் என்பதும் எப்படி இருக்கிறது? தெரியவில்லை.
வினோத், ஏந்தம் என்பதும் இராம.கி பதிவில் பார்த்துத் தான் எடுத்துக்கொண்டேன். அதோடு process controlக்கு செலுத்தக் கட்டுறுத்தல் முதலியனவும். --செல்வராஜ் 01:36, 26 ஏப்ரல் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேதிப்_பொறியியல்&oldid=2525222" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேதிப் பொறியியல்" page.