பேச்சு:123 உடன்படிக்கை
இக்கட்டுரை அணுக்கரு ஆற்றலை அமைதிவழியில் பயனாக்குவது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க-இந்திய அரசுகளுக்கிடையான உடன்பாடு என்ற தலைப்புக்கு (அல்லது அதனையொத்த தலைப்புக்கு) மாற்றப்பட்டு தகவற் கட்டுரையாக மாற்றி எழுதப்படல் வேண்டும். பார்க்க: en:United States-India Peaceful Atomic Energy Cooperation Act. அல்லது இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \பேச்சு 21:39, 22 மார்ச் 2008 (UTC)
அமெரிக்கா, மற்றும் இந்தியா வின் 123 உடன்படிக்கை வாசக வெளியீட்டை அப்படியே கீழே பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன். (இதனை விக்கி நூலில் இடலாமா?). 123 உடன்படிக்கை என்ற கட்டுரையைப் பொதுக்கட்டுரையாக்கியுள்ளேன். அமெரிக்க-இந்திய உடன்பாடு குறித்து பின்வரும் தலைப்பில் கட்டுரையை எழுதலாம்: அணுக்கரு ஆற்றலின் அமைதிவழிப் பயனாக்கம் தொடர்பான அமெரிக்க-இந்திய உடன்படிக்கை. நன்றி.--Kanags \பேச்சு 04:02, 29 மார்ச் 2008 (UTC)
இந்திய-அமெரிக்க அரசுகளுக்கிடையேயான 123 உடன்படிக்கை
தொகு123 உடன்படிக்கை
அமெரிக்கா, மற்றும் இந்தியா வின் 123 உடன்படிக்கை வாசக வெளியீடு
வாசக தொடக்கம்:
அமெரிக்க மாநிலங்களின் ஒன்றியம் அரசுக்கும் இந்தியா அரசுக்கும் இடையே அணுக்கரு ஆற்றலை அமைதிவழி பயனாக்குவது தொடர்பாக ஒத்துழைப்புக்கான உடன்பாடு (123 Agreement)
இந்திய அரசும், அமெரிக்க மாநிலங்களின் ஒன்றியம் அரசும், இனி தரப்பினர் என்றே இவண் சுட்டப்படுவாராக,
பெருகிவரும் உலகளாவிய ஆற்றல் தேவையை, தூய்மையாகவும் திறனாகவும், ஈடு செய்வதில் அமைதிவழி அணுக்கரு ஆற்றலின் பங்களிப்பை கருத்தில் கொண்டும்;
நிலையானதும், நம்பகமும், முன்னறியும் (Predictable) தன்மையும் கொண்ட அடிப்படையில் பெறலாம் என்ற நோக்கம் கொண்ட, அமைதிவழி அணுக்கரு ஆற்றலை, முழுமையாக பெருக்கியும், பயன்படுத்தவும் கொண்ட ஆர்வத்துடனும்;
ஒருவர் மற்றவரின் இறையாண்மையை மதித்தும், மற்றவரது உள்நாட்டு செயல்களில் தலையிடாமலும், சமத்துவமாகவும், தம்முள்ளே பயன்பெறுதலும், மறுதரப்புக்கும், தமக்கு இணையாக செய்து கொடுத்தலும், மற்றும், மறு தரப்பினரின் அணுக்கரு ஆற்றல் தொடர்பான திட்டங்களை உரிய மதிப்புடனும், இநத ஒத்துழைப்பை வளர்க்க விரும்பியும்;
அணுக்கரு ஆற்றலை அமைதிவழி பயனாக்குவது தொடர்பான ஒத்துழைப்புக்கு தேவையான சட்டவடிவம் ஏற்படுத்தும் ஆர்வத்துடனும்;
இரு தரப்பினரும் சம அளவில் நன்மையும், அனுகூலமும் பெற்று உள்ளவரும், பேரழிவு ஆயுதங்கள் பரவலை தடுப்பதில் முனைந்தவரும், முன்னேறிய அணுக்கரு தொழில் நுணுக்கம் கொண்டவருமான நம் இரு நாடுகளிடை இந்த உடன்பாட்டின் கீழ் ஒத்துழைப்பு என்பதை உறுதி செய்தும்;
இதன் தொடர்புடைய, 'அணுக்கரு எரிபொருள் மறுசுழற்சி' உட்பட முழுமையான அமைதிவழி அணுக்கரு ஆற்றல் துறையில் ஒத்துழைப்புக்கு, ஜுலை 18, 2005 இல் இந்திய அமெரிக்கா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வுகளை மனதில் கொண்டும்;
இந்தியாவுக்கும் அமெரிக்காவும் பொருந்திய வண்ணம், பன்னாட்டு அணுக்கரு ஆற்றல் முகமையின் (IAEA ) குறிக்கோள்களுக்கும், நற்காப்பு முறைகளுக்கும் (safeguards system) தமது ஆதரவை உறுதி செய்தும், அணு ஆயுதங்கள் பரவுதலுக்கு பங்களிக்காத வண்ணம் அணுக்கரு ஆற்றலை அமைதி நோக்கில் பயன்படுத்துவதில், உலக நாடுகளிடையே ஒத்துழைப்பை உறுதிபடுத்துவதில் அந்த IAEA நிறுவனத்தின் முதன்மையை உறுதி செய்தும்;
அமைதிவழி அணு ஆற்றலின் பத்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் அணுக்கரு பொருட்களை போதுமான மெய்காப்பில் (physical protection)வைப்பதிலும், தக்க ஏற்றுமதி கட்டுபாடுகளை ஏற்படுத்துவதலும் தாம் தத்தம் பொறுப்புக்களை கவனத்தில் கொண்டும்;
அமைதிவழி அணுக்கரு ஆற்றல் நடவடிக்கைகள் சுற்றுச்சுழல் மாசுபடாமல் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டும்;
பேரழிவு ஆயுதங்கள் பரவாமல் தடுப்பதில் தம்முளே உள்ள முனைப்பை கருத்தில் கொண்டும்; மற்றும்
தம்மிடையே உள்ள அணுகுமுறை பங்குகோடலை (stategic partnership ) வலிமை படுத்துவதில் ஆர்வமுள்ளவராக;
சரத்து 1 - வரையறைகள் (DEFINITIONS)
இந்த உடன்படிக்கையின் தேவைக்காக: (A) "துணைப்பொருட்கள்" (By-product material) என்றால் (அணுப்பிளவுக்கு தகுந்த சிறப்பு பொருட்கள் தவிர்த்து), எந்த ஒரு கதிர்வீச்சு பொருட்கள் ஆகும். அவை, அணுப்பிளவுக்கு தகுந்த சிறப்பு பொருட்களை செய்யும் முறையில் அல்லது அப்பொருட்களை பயன்படுத்தும் முறையில், ஏற்படும் அணுக்கதிர்வீச்சால் விளைந்ததோ அல்லது செய்யப்பட்டதோ ஆம். இந்த துணைப்பொருட்கள், இரண்டு தரப்பினராலும் எழுத்தில் முந்தியே ஒப்புகொண்டால் ஒழிய, இந்த உடன்படிக்கையின்படி, எந்த வகையான நற்காப்பு (safeguards) முறைக்கோ அல்லது கணக்குகோரலுக்கோ ஆட்படாது.
(B) "பாகம் " (Component) என்றால், கருவிகளின் பகுதி பொருட்கள் அல்லது இருதரப்பாலும் குறிப்பிடப்படும் எந்த ஒரு பாகமும் ஆம்.
(C) "உருமாற்றம்" (Conversion) என்றால், அணுக்கரு எரிபொருள் சுழற்சியில், எரிபொருள் தொகுப்புக்கு முன், யுரேனியத்தை ஒரு வேதிநிலையில் இருந்து வேறு வேதிநிலைக்கு உருமாற்றம் செய்யும், செறிவூட்டல் தவிர, பிற வழமையான செயற்பாடுகள் ஆம். எடுத்துக்காட்டாக, யுரேனியம் ஹெக்ச ஃப்ளூரைடு (UF6) -- யுரேனியம் டைஆக்சைடு (UO2)-- யுரேனியம் வல்லியம்.(மெட்டல்)
(D) "உலைஅணைப்பு" (Decommissioning) என்றால், ஆலையின் பயன்தரும் ஆயுளின் முடிவில் ஆலையை அதன் சேவையில் இருந்து ஓய்வு பெற செய்யும் வகையில், அதை அணைக்கும் பணியில் உள்ள பணியாளர்களின் நலம், பொதுமக்கள் நலம், சுற்றுசூழல் ஆகியவற்றை காக்க எடுக்கப்படும் தேவையான நடவடிக்கைகள் ஆம். இந்த நடவடிக்கைகளில், ஆலையை முற்றிலும் மூடுதல், மிகவும் குறைந்த அளவுக்கே அணுக்கரு பொருட்களை அப்புறப்படுத்தல், அத்துடன், அந்த ஆலையும் அது அமைந்த களமும் தடையில்லாமல் பயன்படுத்தப்படும் அளவுக்கு எஞ்சிய கதிர்வீச்சை முற்றிலும் நீக்கும் வரை தொடர்ச்சியான பராமரிப்பும் கண்காணிப்பும் அடங்கும்.
(E) "இரட்டைப்பயன் பண்டங்கள்" (Dual-Use Item) என்றால், அணுக்கரு மற்றும் அணுக்கரு அல்லாத பயன்பாடுகளில் எந்த ஒரு தொழில்நுணுக்க பணிக்கு உதவும் அணுக்கரு தொடர்பான பணடம் ஆம்.
(F) "கருவி" (Equipment) என்றால், அணுக்கரு செயல்பாடுகளில் பயன்படுத்தும் எந்த ஒரு கருவியும் ஆம், அது, உலை, அழுத்த கொதிகலன், எரிபொருளை ஊட்டும் அல்லது நீக்கும் கருவி, உலையை கட்டுப்படுத்தும் தண்டுகள், உயர் அழுத்த குழாய்கள், குளிரூட்டும் முதன்மை இறவைகள், ஜிர்கோனியம் குழாய்கள், எரிபொருள் தொகுக்க பயன்படும் கருவிகள், அல்லது இருதரப்பாலும் இவ்வாறு குறிப்பிடப்பட்ட வேறு எந்த உருப்படியும் ஆகும்
(G) "மிக செறிவுற்ற யுரேனியம்" (High entiched uranium) என்றால் 20% குறையாது ஐசடோப் 235 கொண்டு செறிவூட்டபட்ட யுரேனியம்.
(H) "தொழில் நுட்ப அறிவு" (Information) என்றால் பொது தளங்களில் இல்லாததும், இந்த உடன்படிக்கையின் விளைவாக எந்த வகையிலாவது பரிமாறிக்கொள்ளும், இருதரப்பினராலும் ஒப்புக்கொள்ளபட்டு இந்த உடன்படிக்கைக்கு கட்டுண்டு, எழுத்திலோ இலக்கத்திலோ பதியப்பட்டதும் தொழில்நுட்ப அறிவு ஆம். ஆனால், தொழில் நுட்ப அறிவை கொடுக்கின்ற தரப்பு, அல்லது மூன்றாவது ஒரு தரப்பு பொது தளத்துக்கு அதை வெளியிடும்போது தொழில்நுட்ப அறிவு என்ற வரையறைக்கு உட்படாது போகும்.
(I) "குறை செறிவுற்ற யுரேனியம்" (Low enriched uranium) என்றால் 20% குறைவாகவே ஐசடோப் 235 கொண்டு செறிவூட்டபட்ட யுரேனியம்.
(J) "மிக தேவையான பாகம்" (Major Critical Component) என்றால், இன்றியமையாத (Sensitive) அணுக்கரு ஆலை அல்லது கன நீர் உற்பத்தி ஆலையின் செயல்பாட்டுக்கு, இன்றி அமையாத (Essential) தனி ஒரு பாகம், அல்லது பாகங்களின் கூட்டு.
(K) "அணுக்கரு அல்லாத பொருட்கள்" (Non-nuclear material) என்றால், கனநீர், அல்லது, உலையில் அதிவேக நியூட்றான்களின் வேகத்தை தணிக்க கூடிய தகுதி உள்ள , இருதரப்பின் தக்க அதிகாரிகளால் கூட்டாக ஒப்புக் கொள்ளும் வேறு பொருட்கள்.
(L) "அணுக்கரு பொருட்கள்" (Nuclear material) என்றால், (1) சார்வு பொருட்கள் (source materila) மற்றும் (2) சிறப்பு பிளக்கக்கூடிய பொருட்கள். "சார்வு பொருட்கள்" (source) எனறால், இயற்கையில் கிடைக்கும் பல ஐசடோப்புக்களின் கலவைகொண்ட யுரேனியம், ஐசடோப்பு 235 ஐ வறியசெய்த யுரேனியம், தோரியம், முன்சொல்லப்பட்டவற்றின் வல்லியம், வல்லிய கலவை (alloy), வேதியல் கூட்டுப்பொருள், அல்லது திரட்டு (concentrate), பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் நெறியாளர் குழு அவ்வப்போது குறிப்பிடும் (determine) திரட்சியில், முன்னால் சொன்னவற்றில் ஒன்று அல்லது சில உள்ள பொருட்கள், மற்றும் பன்னாட்டு அணு ஆற்றல் ஆணையத்தின் நெறியாளர் குழு அவ்வப்போது குறிப்பிடும் வேறு எந்த ஒரு பொருள், அல்லது இருதரப்பினரின் தகுந்த அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பொருட்கள். "சிறப்பு பிளக்ககூடிய பொருட்கள்" என்றால், புளுட்டோனியம், யுரேனியம்-233, ஐசடோப் 233 அல்லது 235 கொண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம், பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் நெறியாளர் குழு குறிப்பிடும் முன்சொன்ன பொருட்கள், அல்லது அதை ஒத்த பொருட்கள், அல்லது இருதரப்பினரின் தகுந்த அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பொருட்கள். சிறப்பு பிளக்ககூடிய பொருட்களில் சார்வு பொருட்கள் அடங்கா. பன்னாட்டு அணு ஆற்றல் ஆணையத்தின் நெறியாளர் குழு அதன் சட்டங்களில் சரத்து XX ன் படி குறிப்பிடுபவை, அல்லது சார்வு பொருட்கள் என்றோ, சிறப்பு பிளக்ககூடிய பொருட்கள் என்றோ கருதககூடிய பொருட்களின் அட்டவனையை திருத்தம் செய்தால், அந்த திருத்தத்தை இந்த உடன்படிக்கையின் இருதரப்பினரும் எழுத்தில் ஏற்றுக்க்ண்டால் ஒழிய இந்த உடன்படிக்கையின் கீழ் செல்லுபடி ஆகாது.
(M) "அமைதிவழி நோக்கங்கள்" (Peaceful purposes) எனப்படுவது, தொழில்நுட்ப அறிவு, அணுக்கரு பொருட்கள், பாகங்கள், உள்ளடங்கினவற்றில் ஆராய்ச்சி, மின்சார உற்பத்தி, மருத்துவம், உழவு, மற்றும் தொழில்களில் பயன்படுத்துவது. ஆனால், அணுவெடிக் கருவிகள் அல்லது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்துவது, அதில் ஆராய்ச்சி, அல்லது அதை மேன்மைபடுத்தல் என்பன இதில் அடங்காது. படைத்தளங்களூக்கு வழங்கும் மின்சாரம், படைதளத்தில் நோய்நாடல், மருந்து, நுண்ணிஉயிர் களைவு போன்ற மருத்துவ நோக்கங்கள், மற்றும் இரு தரப்பும் தம்முள் ஒப்புக்கண்ட இதுபோன்ற பிற நோக்கங்கள், இவற்றுக்காக பயன்படுத்த உற்பத்தி செய்யும் ஐசடோப்புகள், படைதுறை(military) நோக்கங்கள் என கருதப்பட மாட்டா.
(N) "நபர்" (Person) என்றால் இருதரப்பினரது நாட்டின் சட்டநெறிகளுக்கு கட்டுப்பட்ட எந்த தனி ஒருவர் அல்லது குழுமம் (Entity) ஆகும். ஆனால் இருதரப்பினர் இதில் அடங்கா.
(O) "உலை" (Reactor) என்றால், அணுக்கரு ஆயுதம் அல்லது அணுக்கரு வெடிக்கும் வடிவகம் (device) அல்லாமல், யுரேனியம், புளுட்டோனியம், அல்லது தோரியம் அல்லது இவற்றின் கலவைகொண்டு தன்துணையாக (self sustaining) பிளவு தொடர்வினை நிகழ்த்தும் எந்த ஒரு கலனும் ஆகும்.
(P) "இன்றியமையாத அணுக்கரு ஆலை" (Sensitive nuclear facility) என்றால், யுரேனியம் செறிவூட்டும் பணியிலும், அணுக்கரு எரிபொருளை மீண்டும் தூய்மை செய்வதிலும், அல்லது புளுடோனியம் அடங்கிய எரிபொருளை தொகுப்பதிலும் முதன்மை பணியாக ஈடுபட்ட, அல்லது அதற்கென குறிப்பிடப்பட்ட ஆலையாகும்.
(Q) "இன்றியமையாத அணுக்கரு தொழில்நுணுக்கம்" (Sensitive nuclear technology) என்றால், எந்த பொது தளத்திலும் இல்லாததும், இன்றியமையாத (sensitive) அணுக்கரு ஆலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், தொகுப்பு (fabrication), மற்றும் பராமரிப்புக்கு தலையாயதும், அல்லது இருதரப்பினரும் ஒப்புக்கொண்ட இதுபோன்ற பிற, தொழில்நுணுக்கமும் ஆகும்.
சரத்து 2 - ஒத்துழைப்பு துறைகள் (Scope of cooperation)
1. இந்த உடன்பாட்டின் கூற்றுக்களுக்கு இணங்க அமைதிவழி அணுக்கரு ஆற்றலை பயன்படுத்த இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த உடன்படிக்கையை இரண்டு தரப்பும் அவரவர் நாட்டின் சட்டங்கள், கட்டுபாடுகள், ஒப்பந்தங்கள், அமைதிவழி அணுக்கரு ஆற்றலை பயன்படுத்த உரிமங்கள் போன்றவற்றுக்கு இணங்க நடைமுறைபடுத்த வேண்டும்.
2. இந்த உடன்பாட்டின் நோக்கமானது, இரு தரப்பினரிடையே, பொதுமையான (civil) அணுக்கரு ஆற்றலில் ஒத்துழைப்புக்கு வழி வகுப்பது. இரு தரப்பினரும் அவரவருக்கு தகுந்த துறைகளில் ஒத்துழைப்பை நாடலாம். அந்த துறைகளாவன, கீழ்கண்டவாறு, ஆனால் இவை மட்டுமே அல்ல:
a) இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட துறைகள் எல்லாவற்றிலும் மேல்கட்ட அணுக்கரு ஆற்றல் ஆராய்வுகள் (Advanced reserch);
b) சரத்து 3 ல் சொல்லப்பட்டபடி, இருதரப்புக்கும் நாட்டமும் திறமையும் உள்ள அணுக்கருசார்ந்த (Nuclear safety) பாதுகாப்பு;
c) கூட்டு ஆராய்ச்சி, கருத்தரங்கம், கூட்டம், பயணம் போன்றவற்றில் அறிவியலாரின் பரிமாற்றத்துக்கு வசதி வாய்ப்புக்கள்;
d) இருதரப்பினரிடையே அல்லது இவரால் அதிகாரம் பெற்றவரிடையே, அணுக்கரு உலைகள், மற்றும் அணுக்கரு எரிபொருள்கள் மறுசுழற்சி ஆகிய நடவடிக்கைகளில், தொழில் மட்டத்திலோ அல்லது வணிக மட்டத்திலோ, தொழில்நுணுக்கம் பரிமாற்றம்;
e) இந்திய அணு உலைகளின் ஆயுளுக்கு தேவையான எரிபொருள் வழங்களில் ஏற்படும் இடையூறுகளுக்கு எதிராக தேவையான அணுகுமுறை இருப்பை (Strategic reserve) அதிகரித்துக்கொள்வது;
f) உயிரியல் ஆராய்ச்சி, மருத்துவம், உழவு மற்றும் தொழில், சுற்றுச்சூழ்நிலை, பருவநிலை மாறுபாடு உட்பட, இவை மட்டுமே எனாது, அணுக்கரு அறிவியலில் உயர்மட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு;
g) அணுக்கரு பொருட்களை, அது, தம் இரு தரப்பினர்க்கு ஆயினும் அல்லது மூன்றாவது தரப்பினர்க்கு ஆயினும் இரு தரப்பினர் இடையே வழங்கிக் கொள்ளல்;
h) சரத்து 6 ல் கூறிய படி, அணுக்கரு பொருட்களை அதன் தன்மையிலும் அதன் உள்ளடக்கத்திலும் (Form and content) மாற்றும் செய்து கொள்ளல்;
i) தம் பயன்பாட்டுகோ, அல்லது இருதரப்பினர் பயன்பாட்டுக்கோ அல்லது மூன்றாவது நாடுகளின் பயன்பாட்டுக்கோ கருவிகளை வழங்கல்;
j) பன்முக திட்டங்கள் (multilateral) projects) உட்பட, கட்டுப்பாட்டுனான வெப்ப அணுக்கரு உருகிணைத்தல் (Controlled Thermo nuclearfusion); மற்றும்
k) இருவருக்கும் ஈடுபாடு உடைய, இருதரப்பினரும் பின்னர் உடன்படும் வேறு துறைகள்.
3) இந்த உடன்பாட்டின் கீழ் அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள், பாகங்கள், மற்றும் தொழில்நுட்ப அறிவுகளை இருதரப்பினரிடையே நேரடியாகவோ அல்லது அவரால் அதிகாரம் கொடுக்கப்பட்ட நபர்களாலோ பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகைய பரிமாற்றங்கள் இந்த உடன்பாட்டின் கீழோ அல்லது அதற்கும் மேற்பட்டு இருதரப்பினரிடையே ஒப்புக்கொண்ட சட்ட திட்டங்களின் படியோ செய்யப்படலாம். அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள், பாகங்கள், மற்றும் தொழில்நுட்ப அறிவுகளை ஒரு தரப்பின் நாட்டில் இருந்து மற்ற தரப்பின் நாட்டுக்கு நேரடியாகவோ அல்லது மூன்றாவது நாட்டின் வாயிலாகவோ செய்யும் பரிமாற்றங்களை, பெறும் தரப்பின் பொறுப்பான அதிகாரிகளால் அனுப்பிய தரப்பின் பொறுப்பான அதிகாரிகளுக்கு, அந்த பொருட்கள் இந்த உடன்பாட்டின் கீழ் அனுப்ப பட்டது என்று உறுதிபடுத்தியும் அதை பெற்ற தரப்பு பெற்றுக் கொள்ளப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டால்தான், அவை இந்த உடன்பாட்டின் விளைவாக செய்யப்பட்டதாக கருதப்பட வேண்டும்.
4) இந்த உடன்பாடானது, அமைதிவழி அணுக்கரு சார்ந்த ஒத்துழைப்புக்கு வழி கோலுவது அன்றி எந்த ஒரு தரப்பினரின் நற்காப்புக்கு புறம்பான (unsafeguarded) அணுக்கரு நடவடிக்கைகளை பாதிக்காது என்பதை இருதரப்பும் வலியுறுத்துகிறன. அதற்கு ஒப்ப, இந்த உடன்பாட்டின் படி பெறப்பட்ட, அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள், பாகங்கள், தொழில்நுட்ப அறிவு அல்லது தொழில்நுணுக்கம், அல்லாமல் தாமாக கையகப்படுத்திய (acquired) அல்லது உற்பத்தி செய்த அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள், பாகங்கள், தொழில்நுட்ப அறிவு அல்லது தொழில்நுணுக்கங்களை தமது சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தும் உரிமையை, இந்த உடன்பாட்டின் எதுவும் பாதிக்கும் என்று அருத்தம் செய்து கொள்ளக்கூடாது. இந்த உடன்பாட்டுக்கு புறம்பாக, தம் தேவைக்காக, தாமே கையகப்படுத்திய அல்லது உற்பத்தி செய்த அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள், பாகங்கள், தொழில்நுட்ப அறிவு அல்லது தொழில்நுணுக்கம் மற்றும் படைத்துறை அணுக்கரு ஆலைகளை பயன்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் பாதிக்காமலோ, இடையூறு செய்யாமலோ, இந்த உடன்படிக்கையை நடைமுறைபடுத்த வேண்டும்.
சரத்து 3 - தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் (TRANSFER OF INFORMATION)
1. இரு தரப்பினர் இடையேயும் அமைதிவழி அணுக்கரு ஆற்றல் பயன்பாட்டுக்கு தொடர்பான தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இந்த தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், அறிக்கைகள், புள்ளி வங்கிகள் (data banks), கணினி செயலிகள் மற்றும் இருதரப்பும் தம்முள் ஒப்புக்கொண்ட பிற வழிகளிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். கீழ் காணும் துறைகள் இதில் அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல:
a. ஆராய்ச்சி, வளர்ச்சிப்பணி, வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு மற்றும் உலைகளின் பயன்பாடு, உலைகளில் சோதனைகள், மற்றும் உலைஅணைப்பு செய்தல்;
b. இயல்பியல், வேதியியல், கதிர்வீச்சு இயல், உயிரியல் ஆய்வுகள், மருத்துவம், உழவு மற்றும் தொழில்களில் அணுக்கரு பொருட்களைன் பயன்பாடு;
c. தம்மொடு தொடர்புடைய பிற தரப்பினருடன் பன்முக அணுகுமுறையால் அணுக்கரு எரிபொருள் வழங்கலில் உறுதிப்பாடு பெறுதல் உடபட, எரிபொருள் சுழற்சி நடவடிக்கைகளால், எதிர்கால உலகளாவிய பொதுமை (civil) அணுக்கரு ஆற்றல் தேவையை எதிர்கொள்ளல், மற்றும் அணுக்கரு கழிவுகளை கையாளும் தகுந்த தொழில்நுணுக்கங்கள்;
d. அணுக்கரு அறிவியல் மற்றும் தொழில்நுணுக்கத்தில் முதுநிலை ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள்;
e. முன் சொல்லியவற்றுக்கு தொடர்புள்ள மக்கள்நலம், பத்திரம், மற்றும் சூழ்நிலைக்கு அக்கறையுள்ளன;
f. நாட்டின் ஆற்றல் தொடர்பான திட்டமிடல்களில் அணுக்கரு ஆற்றலின் பங்கு பற்றிய மதிப்பீடு;
g. அணுக்கரு தொழிலுக்கான நெறிகள் (Codes), வரைமுறைகள் (regulations) மற்றும் தரநிலைகள் (standards);
h. இருவழி நடவடிககைகள் உட்பட கட்டுப்படுத்திய வெப்ப அணுக்கரு உருகிணைப்பு (thermonuclear fusion) துறையில் ஆராய்ச்சி, மற்றும் 'பன்னாட்டு வெப்பஅணுக்கரு சோதனைமுறை உலை' போன்ற பன்முக திட்டங்களுக்கு (ITER) பங்களிப்பு; மற்றும்
i. இருதரப்பும் தம்முள் ஒப்புக்கொண்ட பிற துறைகள்;
2. இந்த சரத்தின்படி தொடரும் ஒத்துழைப்பில், கூட்டு ஆய்வுகள் மற்றும் திட்டங்களில், சமபங்கில் பயிற்சி, பணிஆள் பரிமற்றம், கூட்டங்கள், பதம் (sample) பரிமாற்றம், சோதனைகளின் நோக்கத்துக்கான பண்டம் (materials) மற்றும் அளவை கருவிகளும் (instruments) அடங்கும்.
3. இந்த உடன்படிக்கையின் எல்லைக்குள் வராத விடயங்கள் பற்றிய எந்த தொழில்நுட்ப அறிவையும் பரிமாறிக் கொள்ளவோ, அல்லது இரு நாடுகளின் உடன்பாடுகள், நாட்டின் சட்டங்கள் அல்லது வரைமுறைகள் (treaties, national laws, or regulations) அனுமதிக்காத தொழில்நுட்ப அறிவை பரிமாறவோ, இதன் உடன்படிக்கை வலியுறுத்தவில்லை.
4. ஒவ்வொரு நாடும் தாம் கட்டுப்படுத்திய புள்ளிவிவரங்கள் என வரையறுத்தவற்றை, இந்த உடன்படிக்கையின் கீழ் பரிமாறிக் கொள்ள தேவை இல்லை.
சரத்து 4 - அணுக்கரு வணிகம் (NUCLEAR TRADE)
தொகுக்கப்படவேண்டும்.
சரத்து 5 - அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள், பாகங்கள் மற்றும இவற்றின் தொடர்புடைய தொழில்நுணுக்க பரிமாற்றம். (TRANSFER OF NUCLEAR MATERIAL, NON-NUCLEAR MATERIAL, EQUIPMENT, COMPONENTS AND RELATED TECHNOLOGY)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 6 - அணுக்கரு எரிபொருள் சுழற்சி நடவடிக்கைகள் ( NUCLEAR FUEL CYCLE ACTIVITIES)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 7 - தேக்கி வைத்தலும் மறுபரிமாற்றமும் (STORAGE AND RETRANSFERS )
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 8 - மெய்க்காப்புகள் (PHYSICAL PROTECTION)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 9 - அமைதிவழி பயன்பாடுகள் (PEACEFUL USE)
இந்த உடன்படிக்கையின் விளைவாக பரிமாறிக்கொண்ட, அணுக்கரு பொருட்கள், கருவிகள், பாகங்களையோ, அவ்வாறு பரிமாறிக் கொண்டவற்றில் பயன்படுத்திவிட்ட அணுக்கரு பொருட்கள், கருவிகள், பாகங்களையோ, அல்லது இவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்த அணுக்கரு பொருட்கள், மற்றும் துணைப் பொருட்களையோ, அவ்வாறு பெற்ற தரப்பு, அணுக்கரு வெடிப்பு சாதனங்களிலோ, அணுக்கரு வெடிப்பு சாதனங்களுக்கான ஆராய்ச்சி, உருவாக்கல், அல்லது எந்த ஒரு படை நோக்கங்களிலோ (military purpose) பயன்படுத்தல் கூடாது.
சரத்து 10 - பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் நற்காப்புகள் (IAEA SAFEGUARDS)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 11 - சுற்றுச்சூழல் காப்பு (ENVIRONMENTAL PROTECTION)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 12 - உடன்படிக்கை நடைமுறை ஆக்கம் (IMPLEMENTATION OF THE AGREEMENT)
1. இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல் கீழகாணும் வண்ணம் இருக்க வேண்டும்:
a) எந்த ஒரு தரப்பின் நாட்டில் உள்ள அணுக்கரு தொடர்பான நடவடிக்கைளுக்கு ஊறு விளைவித்தல் அல்லது காலம் தாழ்த்துதலை தவிர்த்தல்; b) அது போன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு தவிர்த்தல்; c)அது போன்ற நடவடிக்கைகள், பாதுகாப்பாக செயல்பட, சிறந்த மேலாண்மை வழக்கங்களுக்கு இணக்கமாக இருத்தல்; மற்றும் d) இரு தரப்பினரின், அணுக்கரு ஆற்றல் திட்டங்களின் நீண்ட நாள் தேவைப்பாடுகளை முழுமையாக கணக்கில் கொள்ளுதல்;
2. இந்த உடன்படிக்கையில் சொல்லப்பட்டவைகள் கீழ்காண்பவற்றுக்கு பயன்படுத்த கூடாது:
a) நேர்மைக்கு புறம்பாக தொழில்துறை அனுகூலம் பெறல் அல்லது, இருதரப்பு நபர்களது (persons) தொழில்முயற்சிகளுக்கு தீங்குறும் வண்ணம் வணிகத்தை கட்டுப்படுத்தல், அல்லது, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகம் அல்லது தொழில் முயற்சிகளில் இடையூறு செய்தல்; b) ஆராய்ச்சி, மற்றும் வளர்ச்சி பணிகள் உட்பட, அணுக்கரு ஆற்றலின் அமைதிவழி பயன்பாட்டை முன்னேற்றும் கொள்கை அல்லது திட்டங்களில் தலைஇடுதல்; அல்லது c) இந்த உடன்படிக்கையின் படி வழங்கப்பட்ட அணுக்கரு பொருட்கள், அணுக்கரு அல்லாத பொருட்கள், கருவிகள் இரு தரப்பினரின் நாடுகளில் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல்
3. இந்த உடன்படிக்கையின் தொடர்பாக, அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள், உடன்பாடுகளை செயல்படுத்துவ்தற்கு, வல்லுநர்கள் பரிமாற்றம் தேவைப்பட்டால், இருதரப்பும் தம் நாடுகளில், தம்நாட்டின் சட்டதிட்டங்கள், மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க,வல்லுநர்கள நுழைவுக்கும் தங்கலுக்கும் வசதிகள் செய்தல் வேண்டும். இந்த உடன்பாட்டினபடி பிற ஒத்துழைப்புகளுக்காக வல்லுநர்கள் பரிமாற்றம் தேவைப்பட்டால், இருதரப்பும் தம் நாடுகளில், தம்நாட்டின் சட்டதிட்டங்கள், மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க, வல்லுநர்கள நுழைவுக்கும் தங்கலுக்கும் வசதிகள் செய்தல் வேண்டும்.
சரத்து 13 - கலந்துரையாடல் (CONSULTATIONS)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 14 - ஒத்துழைப்பு இடைநிறுத்தமும் முடித்தலும் (TERMINATION AND CESSATION OF COOPERATION)
தொகுக்கப்படவேண்டும்
சரத்து 15 - தகராறுகளை தீர்வு செய்தல்(SETTLEMENT OF DISPUTES)
இந்த உடன்படிக்கையில் சொல்லியவற்றை பொருளுணர்தல் அல்லது நடைமுறைப் படுத்தல் (interpretation or implementation) தொடர்பான பிணக்குகளை, இருதரப்புகளும் அந்த பிணக்குக்கு தீர்வு காணும்முகத்தான், உடனடியாக பேசுவார்த்தைகள் நடத்த வேண்டும்.
சரத்து 16 - நடைமுறைபடுத்தலும் காலமும்(ENTRY INTO FORCE AND DURATION) தொகுக்கப்படவேண்டும்
சரத்து 17 - நிர்வாக ஏற்பாடுகள்(ADMINISTRATIVE ARRANGEMENT)
தொகுக்கப்படவேண்டும்
உசாத்துணைகள்:
http://www.state.gov/r/pa/prs/ps/2007/aug/90050.htm