பேச்சு:2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Kanags
2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@பயனர்:Kanags, ஓட்டங்களால் வெற்றி என்பது இத்தனை ஓட்டங்கள் எடுத்ததால் வெற்றி பெற்றது என்ற தவறான பொருளில் விளங்கிக் கொள்ளப்பட இயலும். ஆனால் அது வெற்றி பெற்ற அணிக்கும் எதிரணிக்கும் இடையே உள்ள ஒட்டங்களின் வித்தியாசத்தையே குறிக்கிறது. இலங்கை அரசு அதிகாரப்பூர்வ செய்தி வலைத்தளத்தில் ஓட்டங்கள் வித்தியாசத்தில் என்று பயன்படுத்தி இருப்பதைக் காணவும்.1 தவிர பெரும்பாலான தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளிலும் வித்தியாசத்தில் என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டும் கூறலாம்.
- He won the election by 8000 votes.
- அவர் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
AakashAH120 (பேச்சு) 10:39, 21 ஆகத்து 2019 (UTC)Reply
- @AakashAH120: ஆங்கிலத்தில் எழுதும் போது சரியாக விளங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் தமிழில் எழுதும் போது மட்டும் ஏன் நேரடியான பொருளில் விளங்கிக் கொள்கிறீர்கள். England won by 10 runs தமிழில் 10 ஓட்டங்களால் வெற்றி என எழுதுவதில் தவறே இல்லை. அதே போல் 8000 வாக்குகளால் வெற்றி என்று எழுதுவதும் சரியானதே. 8000 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார் என்ற பொருளில் இது வராது. அது தவிர, வித்தியாசம் என்பது தமிழ் மூலச் சொல்லும் இல்லை. வேறுபாடு என்பதே சரியான தமிழ். தமிழகப் பத்திரிகைகள் எவ்வாறு தமிழைக் கொலை செய்கின்றன என்பதை அனைவரும் அறிவர். இக்கொலைகளை நாமும் பின்பற்ற வேண்டுமா?--Kanags \உரையாடுக 10:48, 21 ஆகத்து 2019 (UTC)Reply
- வடமொழிச் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்ற தங்கள் கருத்து முற்றிலும் சரியானது. இனி ஓட்டங்களால் வெற்றி என்று பயன்படுத்துகிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 11:06, 21 ஆகத்து 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2019–21_ஐசிசி_உலகத்_தேர்வுத்_துடுப்பாட்ட_வாகை&oldid=2790687" இலிருந்து மீள்விக்கப்பட்டது