பேச்சு:9814072356 (எண்)

இரும (binary), முன்ம, நான்ம, ஐம்ம, அறும, எழும, எண்ம (octal), ஒன்பதின்ம, பதின்ம(decimal), பதினறும (hexadecimal) என்று சீராக சொல்லலாம். Binary = இரும (இருமம்).--செல்வா 15:19, 29 பெப்ரவரி 2012 (UTC)

அவ்வாறே பயன்படுத்துகின்றேன். துவித என்றும் குறிப்பிடலாம் தானே... --மதனாஹரன் (பேச்சு) 09:14, 1 மார்ச் 2012 (UTC)

தமிழ் பெயர்கள்

தொகு

இக்கட்டுரை எண்ணை பற்றி இருப்பதால், பில்லியன், மில்லியன் என்பதற்கு பதிலாக தமிழ் பெயர்களான அற்புதம், கணம் உள்ளிட்ட சொற்களை பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இந்த எண்ணை பற்றி மூன்று மொழிகளில் கட்டுரை உள்ளது, இந்த எண்ணிற்கு ஏதேனும் விசேடம் உள்ளதா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:50, 22 ஏப்ரல் 2012 (UTC)

பத்து இலக்கங்களையும் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்திப் பெறக்கூடிய வர்க்க எண்ணே இது. அற்புதம், கணம் என்பன தமிழ்ச் சொற்கள் இல்லை. அவை வட மொழிச் சொற்களே. இலட்சமும் கூட வட மொழிச் சொல்லே. ஆகவே, உரிய தமிழ்ச் சொற்கள் கிடைக்கும் வரை வட சொற்களைப் பயன்படுத்துவதை விட நியம வடிவமான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தலாம். --மதனாஹரன் (பேச்சு) 12:31, 23 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:9814072356_(எண்)&oldid=1092782" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "9814072356 (எண்)" page.