பேச்சு வழக்கு

பேச்சு வழக்கு அல்லது பேச்சு மொழி என்பது இயல்பாக உருவாகும் மொழி வடிவம் ஆகும். இது மொழியின் எழுத்து வழக்கில் இருந்து வேறுபட்டது. எந்த ஒரு சமுதாயத்திலும் பேச்சு மொழியே காலத்தால் முற்பட்டது. பல வளர்ச்சியடையாத மொழிகளில் இன்னும் பேச்சு வழக்கு மட்டுமே உள்ளதையும் காணலாம்.

பேச்சு மொழியில் பேசுவதன் பொருள் பெரும்பாலும் சூழ்நிலையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது, பெரும்பாலான பொருள் விளக்கம் எழுத்தின் மூலமே வெளிப்படும் எழுத்து வழக்கினின்றும் வேறுபட்டது. பேச்சு வழக்கில் கூற்றின் பொருள் பட்டறிவின் வாயிலான பொது அறிவின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதே வேளை எழுத்து மொழியில் பொருள் விளக்கம் ஓரியல்பானதும் தருக்க ரீதியானதுமான அமைப்பிலேயே தங்கியுள்ளது. அத்தோடு எழுத்து வழக்கு புறவயமான தகவல்களைத் தெரிவிக்க முயலும்; அதை வேளை பேச்சு வழக்கோ அகவயமான தகவல்களைக் கேட்பவருக்கு வழங்குகிறது.[1]

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையிலான உறவு சிக்கலானது. தற்கால மொழியியல் துறையில், பேச்சு மொழி மனிதரின் உள்ளார்ந்த செயல்வன்மை என்றும், எழுத்து மொழி ஒரு பண்பாட்டுக் கண்டுபிடிப்பு என்றும் கருதுகின்றனர்.[2] அதேவேளை "பிராக் சிந்தனைக்குழு" போன்றவற்றைச் சேர்ந்த சிலர், பேச்சு மொழியும், எழுத்து மொழியும், தனித்துவமான சிறப்பியல்புகளைக் கொண்டவை என்று கூறுவதுடன், எழுத்து மொழி பேச்சு மொழியில் தங்கியிருப்பது என்பதையும் ஏற்றுக்கொள்வதில்லை.[3]

குறிப்புகள் தொகு

  1. Tannen, Deborah (1982). Spoken and written language: exploring orality and literacy. Norwood, N.J.: ABLEX Pub. Corp.. 
  2. Pinker, S., & Bloom, P. (1990). Natural language and natural selection. Behavioral and Brain Sciences, 13, 707–784.
  3. Aaron, P. G., & Joshi, R. M. (2006). Written language is as natural as spoken language: A biolinguistic perspective. Reading Psychology, 27(4), 263–311.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு_வழக்கு&oldid=3080045" இலிருந்து மீள்விக்கப்பட்டது