பேச்சொலிக் கருவிகள்

பேச்சொலிக் கருவிகள் நாம் பேச உதவும் ஒலிகளை உருவாக்கும் உறுப்புகளுக்கு `பேச்சொலிக் கருவிகள்’ என்று பெயர். செயல்களுக்கு ஏற்ப, பேச்சுக்கருவிகளை மூன்றாக வகைப்படுத்தலாம். (1) பேச்சொலிகளை உண்டாக்க காற்றினைத் தந்து உதவும் மார்பறையில் அமைந்துள்ள உறுப்புகளான உதரவிதானம், நுரையீரல். (2) அடிப்படை ஒலியை உண்டாக்கும் தொண்டைக் குருத்தெலும்பு, குரல்வளை மடல்கள், (3) பல்வேறுபட்ட பேச்சொலிகளை உண்டாக்கப் பயன்படும் வாயில் அமைந்த உறுப்புக்களான நாக்கு, உள்நாக்கு, அண்ணம், பல் போன்றன. வாயில் அமைந்த இவ்வுறுப்புகளை மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். (1) இயங்குறுப்புகள் – இதழ், நாக்கு, உள்நாக்கு, (2) இயங்குறுப்புகள் – பல், அண்ணம்.

சான்றுகள் தொகு

[1]

  1. புனல் கா. முருகையன் (1974) பேச்சுப் பொறி. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண் 831-836.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சொலிக்_கருவிகள்&oldid=3602418" இலிருந்து மீள்விக்கப்பட்டது