பேட் மேன் (2018 திரைப்படம்)

பேட் மேன் (Pad Man) என்பது நகைச்சுவை நாடகப் பாணியில் அமைந்த ஒரு இந்தித் திரைப்படம் ஆகும். டுவிங்கில் கன்னா எழுதிய புத்தகத்தில் இடம்பெற்ற சிறு கதை அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவானது. ஆர்.பால்கி என்பவர் திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார். அக்சய் குமார், சோனம் கபூர், ராதிகா அப்டே ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 2018 பிப்ரவரி 9 ஆம் திகதியில் இது வெளியானது. பெண்களுக்கான மாதவிடாய் கால அணையாடைகளை குறைந்த செலவில் தயாரித்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் சமூக அக்கறையின் ஊக்கத்தினால் இக்கதை எழுதப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்_மேன்_(2018_திரைப்படம்)&oldid=3953733" இலிருந்து மீள்விக்கப்பட்டது