பேணிப்பந்து

பேணிப்பந்து என்பது பேணிகளை அல்லது தகரங்களை அடுக்கடுக்கா அடுக்கு வைத்து, தூர நின்று பந்தால் அட

பேணி அடித்தல் அல்லது பேணிப்பந்து என்பது பேணிகளை அல்லது தகரங்களை அடுக்கடுக்கா அடுக்கு வைத்து, தூர நின்று பந்தால் அடுத்து விழுத்தல் ஆகும். இது எல்லா வயதினரும் விளையாடக்கூடிய ஒரு எளிமையான விளையாட்டு. எத்தனை பேணிகளை அதிகம் ஒருவர் வீழ்த்துகிறார் என்பதே இந்த விளையாட்டின் வெற்றி இலக்கு.

விளையாட்டு விதி முறைகள்

தொகு
  1. விளையாட்டு வீரர்கள் இரு சமனான எண்ணிக்கை கொண்ட அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள்.
  2. இரண்டு அணியிலிருந்தும் ஒரேயளவு தூரத்தில், நடுவிலிருக்கக் கூடியதாய், 7 தொடக்கம் 8 வரையிலான பேணிகள் அவற்றின் பருமனின் அடிப்படையில் பெரிதிலிருந்து சிறிது மேலிருக்கும் வகையில் அடுக்கப்படும்.
  3. அடுக்கப்பட்ட பேணிகளிலிருந்து இரண்டு அணிகளும் பந்து வீசும் தூரத்தில் நிறுத்தப்படுவார்கள்.
  4. இரண்டு அணிகளும் குறி பார்த்துப் பந்தை எறிந்து பேணியின் அடுக்கைக் கலைக்க முயலுவார்கள். இரண்டு அணிகளும் மாறி மாறி சமனான வாய்ப்புகளில் பேணியின் அடுக்கை உடைக்க முயலுவார்கள்.
  5. பந்தை எறிந்து பேணியின் அடுக்கை உடைத்த அணி, அதை மீளக் கட்ட முயல வேண்டும். கட்டும் போது உடைந்தால் மீண்டும் கட்டி எழுப்ப முயற்சிக்க வேண்டும்.
  6. எதிர் அணி, பேணியை அடுக்க முயலுபவர்களையும் அந்த அணியைச் சேர்ந்தவர்களையும் காலில் படக்கூடியதாய்ப் பந்தை எறிவதன் மூலம் ஆட்டமிழக்க வைக்க முயலுவார்கள்.
  7. பந்து உடலில் படாமல் தன்னைக் காத்துக் கொண்டு பேணியின் அடுக்கை மீள எழுப்பி முடித்தால் அந்த அணி வெற்றி பெற்றவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
  8. மாறாகப் பேணியின் அடுக்கை மீளக்கட்டும் முன் பந்து உடலில் பட்டு அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தால் எதிர் அணி புள்ளி ஒன்றைப் பெற்றுக் கொள்வார்கள்.
  9. அதிக புள்ளிகளைப் பெற்ற அணி வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேணிப்பந்து&oldid=3072907" இலிருந்து மீள்விக்கப்பட்டது