பேபியானைட்டு
பேபியானைட்டு (Fabianite) என்பது CaB3O5(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். வெண்மை நிறத்தில் கீற்றுகளாக இக்கனிமம் தோன்றுகிறது. ஒற்றைச்சரிவச்சு பட்டகத்தன்மையுடன் படிகங்களாக இக்கனிமம் காணப்படுகிறது. ஒளிபுகும் தன்மையுடன் ஒளிரும் தன்மையும், கண்ணாடி போன்ற பளபளப்பும் இதன் இயற்பியல் பண்புகளாகும். 6 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பைக் கொண்டுள்ளது. பேபியானைட்டுக்கு கதிரியக்கத்தன்மை கிடையாது. செருமானிய புவியியலாளர் ஆன்சு-யோவாசிம் பேபியான் நினைவாக இக்கனிமத்திற்கு பேபியானைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.
பேபியானைட்டு Fabianite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பைல்லோபோரேட்டுகள் |
வேதி வாய்பாடு | CaB3O5(OH) |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள்
தொகு- Webmineral Entry
- Mineral Handbook
- J. A. Konnert; J. R. Clark; C. L. Christ (1970). "Crystal structure of fabianite, CaB30S(OH), and comparison with the structure of its synthetic dimorph". Zeitschrift für Kristallographie 132: 241–254. doi:10.1524/zkri.1970.132.1-6.241. Bibcode: 1970ZK....132..241K. http://rruff.geo.arizona.edu/doclib/zk/vol132/ZK132_241.pdf.
- Richard C. Erd; G. Donald Eberlein; C. L. Christ (1969). "Fabianite and its synthetic dimorph, CaB 3 O 5 (OH); new data". The Canadian Mineralogist 10 (1): 108–112.