பேப்பரா அணை

பேப்பரா அணை (Peppara Dam) என்பது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கரமனையாறு மீது கட்டப்பட்ட புவியீர்ப்பு அணையாகும். 1983ஆம் ஆண்டு கேரள நீர் ஆணையத்தால் கட்டப்பட்ட இந்த அணை 83 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த நீர்பிடிப்பு பகுதியில் ஆண்டிற்கு சராசரியாக 481 செ.மீ. மழையைப் பெறுகிறது. சுமார் 423 மீட்டர் நீளமுள்ள இந்த அணையானது கரமனா ஆற்றின் அனைத்து துணை நதிகளையும் ஒன்றிணைக்கிறது. அருவிக்கரைக்கான நீர் ஓட்டம் திருவனந்தபுரம் நகரத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது. பெப்பராவில் 3 மெகாவாட் நீர்மின் நிலையமும் உள்ளது. இது திருவனந்தபுரம் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த அணை பேப்பரா வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது.[1][2][3][4][5]

பேப்பரா அணை
Peppara Dam
பேப்பரா அணை
பேப்பரா அணை is located in இந்தியா
பேப்பரா அணை
Location of பேப்பரா அணை
Peppara Dam in இந்தியா
பேப்பரா அணை is located in கேரளம்
பேப்பரா அணை
பேப்பரா அணை (கேரளம்)
பேப்பரா அணை is located in தமிழ் நாடு
பேப்பரா அணை
பேப்பரா அணை (தமிழ் நாடு)
புவியியல் ஆள்கூற்று8°37′23″N 77°08′17″E / 8.623°N 77.138°E / 8.623; 77.138
திறந்தது1983; 41 ஆண்டுகளுக்கு முன்னர் (1983)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேப்பரா_அணை&oldid=3781224" இலிருந்து மீள்விக்கப்பட்டது