பேயர் முறை
பேயர் முறை (Bayer process) என்பது அலுமினியத்தின் தாதுவான பாக்சைட் தாதுவைத் தூய்மைப்படுத்தி அதிலிருந்து அலுமினா (Al2O3)எனப்படும் அலுமினியம் ஆக்சைடைப் பெறும் முறை ஆகும். கார்ல் பேயர் என்ற ஆஸ்திரிய வேதியலாளர் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறையான பேயர் முறையைக் கண்டறிந்தார்.[1]]பாக்சைட் தாதுவில் 30 முதல் 54 விழுகாடு வரை அலுமினா உள்ளது. மீதமுள்ளவை இரும்பு ஆக்சைடு, சிலிகா மற்றும் டைடேனியம் ஆக்சைடு ஆகியவையாகும்.[2]
செயல்முறை
தொகுபேயர் முறையில் பாக்சைட் நன்கு பொடியாக்கப்பட்டு சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் 175°செ. வெப்ப நிலையில் நன்கு கலக்கப்படுகிறது. இதனால் அலுமினா, அலுமினியம் ஹைட்ராக்சைடாக மாறுகிறது. இது NaOH கரைசலில் கரைகிறது.
- 1.NaAl(OH)4 → Al(OH)3 + NaOH
பாக்சைட்டில் உள்ள மற்ற ஆக்சைடுகள் கரைவதில்லை. இவற்றை வடிகட்டிப் பிரித்துவிடலாம். கரைசலைக் குளிர்விக்கும் பொழுது அலுமினியம் ஹைடிராக்சைடு வீழ்படிவாகிறாது. இதனை 980°செ. க்குச் சூடேற்றினால் தூய அலுமினா கிடைக்கப்பெறுகிறது. ஹால்-ஹெரௌல்டு முறையில் அலுமினா அலுமினியமாக மாற்றப்படுகிறது.
- 2.Al2O3 + 2OH- +3H2O →2[Al(OH)4]-
உசாத்துணை
தொகுஆர். வேங்கடராமன், முழுமை அறிவியல் உலகம்', பக். 3611
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆர். வேங்கடராமன், முழுமை அறிவியல் உலகம்', பக். 3611
- ↑ Harris, Chris; McLachlan, R. (Rosalie); Clark, Colin (1998). Micro reform – impacts on firms: aluminium case study. Melbourne: Industry Commission. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-33550-2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)