பேய் கிருஷ்ணன்

பேய் கிருஷ்ணன் என்பவர் தமிழ் திரையுலக நடிகராவார். இவர் எண்ணற்ற திரைப்படங்களில் சண்டை நடிகராக நடித்திருந்தாலும், தமிழில் நகைச்சுவை நடிகராகவே அறியப்படுகிறார்.

திரை வாய்ப்பு தொகு

1998 இல் படைப்பாளி என்ற சங்கத்தில் இணைந்து மாஸ்டர் ஆக்ஸ் பாபு என்பவருடன் தவுடு என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிவாஜி, முரளி இணைந்து நடித்த ராசாவே வா திரைப்படத்தில் சாராயக் கடை ஒன்றில் முரளியோடு சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

நகரம் திரைப்படத்தில் அடியாளாக நடித்துள்ளார். அதன் பிறகு சுந்தர் சி நாகனாக நடித்த தலைநகரம் 2 திரைப்படத்திலும் நடித்தார். சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பிரபலமாதல் தொகு

சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படம் வெளியானது.[1] இத் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்திருந்தார். அவரின் அடியாட்களில் ஒருவராக கிருஷ்ணன் நடித்திருந்தார். சந்தானத்துடன் திமிங்கிலம், பேய், மண்டகசாயம் என மூன்று நபர்கள் எப்போதும் உடனிருப்பது போல காட்சிகள் இருக்கும். நாயகி அஞ்சலி தண்ணீரில் மூழ்கியதாக நினைத்து அனைவரும் தேட பேய் கிருஷ்ணன் சந்தானத்தை தூக்குவார். கலகலப்பு திரைப்படம் மூலம் மக்களிடம் வரவேற்பு பெற்றதால் பேய் கிருஷ்ணன் என்றே அறியப்பெறுகிறார்.

ஆதாரங்கள் தொகு

  1. "கலகலப்பு". Dinamalar.

வெளி இணைப்புகள் தொகு

imdb

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_கிருஷ்ணன்&oldid=3747997" இலிருந்து மீள்விக்கப்பட்டது