பேய் பந்து
பேய் பந்து அல்லது எறிபந்து எனப்படும் விளையாட்டானது ஒருவரை ஒருவர் மூர்க்கத்தனமாக பந்தினை எறிந்து தாக்குதலாகும். இந்த விளையாட்டை இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடலாம் அல்லது தனித் தனியாகவும் விளையாடலாம். இலக்குகள் ஏதும் இல்லாமல் ஒருவரை ஒருவர் பந்தினால் தாக்குவதை மட்டுமே இலக்காக கொண்டு இந்த விளையாட்டு விளையாடப் படுகின்றது. கூடுதலாக இந்த விளையாட்டு மூர்க்கத்தனமாக இருப்பதனால் பெற்றோர் இந்த விளையாட்டை விளையாட தம் சிறார்களை அனுமதிப்பதில்லை.