பேரகம் மகாதேவர் கோயில்

பேரகம் மகாதேவர் கோயில் (Perakam mahadaeva temple) சிவபெருமானுக்கு படைத்தளிக்கப்பட்ட ஒரு பழங்கால இந்து கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிச்சூர் மாவட்டத்தின் பேரகம் கிராமத்தில் அமைந்துள்ளது. பரசுராம முனிவர் பேரகம் கிராமத்தில் சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.[1]இக்கோயில் சிவாலய ஸ்தோத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கேரளாவின் புகழ்பெற்ற 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும்.[2]

பேரகம் மகாதேவர் கோயில்
கோயில் நாலம்பலம்
அமைவிடம்
நாடு: India
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:பேரகம்
ஆள்கூறுகள்:10°36′03″N 76°01′26″E / 10.6009266°N 76.023831°E / 10.6009266; 76.023831
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

கோயில் அமைப்பு தொகு

இது திருச்சூர் மாவட்டத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.தற்போதைய கோயில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.இக்கோவிலின் சிவன் பேரகம் கிராமத்தின் பாதுகாவலர் என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்.இந்த கோயில் நாலம்பலம், திடப்பள்ளி, வட்டா திருக்கோயில் மற்றும் மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியது.இடைக்கால கோயில்களின் ஒரு பகுதியாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.பேரகம் சிவன் கோயில் மேற்கு நோக்கி அமைந்து உள்ளது. தினசரி மூன்று பூஜைகள் நடத்தப்படுகின்றன. அவை உஷா பூஜை, உச்சி கால பூஜை, இரவு பூஜை ஆகியவை ஆகும்.

துணை தெய்வங்கள் தொகு

  • அய்யப்பன்
  • வெட்டகோரு மக்கன்
  • கணபதி
  • தேவி பார்வதி
  • நாக தேவி[3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "108 Shiva temples of Kerala". www.shaivam.org.
  2. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". www.vaikhari.org.
  3. "PERAKAM SREE MAHADEVA". www.thekeralatemples.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரகம்_மகாதேவர்_கோயில்&oldid=3837124" இலிருந்து மீள்விக்கப்பட்டது