பேராழிகளின் வகைகள்
பேராழி என்பது "ஒகேனஸ்"என்ற கிரேக்கச் சொல்லகும்.பெரும் பரப்பிலான நீரினால் சூழப்பட்டிருக்கும் பகுதியை பேராழி என அழைக்கின்றோம்.கடல் நீரின் இயற்கை மற்றும் வேதித்தன்மை, ஆழம், வெப்பநிலை, உவர்ப்பியம் மற்றும் கடலடிப் பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி படிக்கக் கூடிய ஒரு அறிவியலாகும்.
பேராழிகளின் வகைகள்
தொகுபேராழிகள் ஐந்து வகைப்படும்.
- பசுபிக் பேராழி.
- அட்லாண்டிக் பேராழி.
- இந்திய பேராழி
- அண்டார்டிக்கா பேராழி.
- ஆர்டிக் பேராழிLocationOceans transparent.png
LocationOceans transparent.png 2,759 × 1,404; 41 KB
பசுபிக் பேராழி
தொகுமிகப் பரந்த மற்றும் ஆழமான இப்பேராழி முக்கோண வடிவத்தை கொண்டது.புவியின் மொத்த மேற்பரப்பில் 33% கொண்டுள்ளது.மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா,கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா,தெற்கில் அண்டார்டிக்காவை எல்லைகளாக கொண்டுள்ளது.மேலும் 20,000 தீவுகளையும் கொண்டது.முக்கிய நியூசிலாந்து,இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஹவாய் ஆகும். உலகின் மிக ஆழமான பகுதி தென் பசுபிக்கில் உள்ள சேலஞ்சர் ஆழிக்குழி ( மரியானா ஆழிக்குழி ).Pacific map.gif Pacific map.gif 1,519 × 1,338; 802 KB
அட்லாண்டிக் பேராழி
தொகுநீண்ட "S" வடிவத்தைக் கொண்ட இப்பேராழி புவியின் மொத்தப் பரப்பில் 16.5% வரை பரவிக் காணப்படுகிறது.இது பசுபிக் பேராழியில் 50% பரப்பினைக் கொண்டது.மேற்கே வட மற்றும் தென் அமெரிக்காவாலும்,கிழக்கே ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவாலும் சூழப்பட்டுள்ளது.இப்பேராழியில் காணப்படும் முக்கிய தீவுகள் கீரின்லாந்து,பிரித்தானிய தீவுகள்,நீயூஃபண்லாந்து,மேற்கிந்திய தீவுகள், வெர்டிமுனை ம்ற்றும் கானரீஸ். ஆகும்.இப்பேராழியில் வர்த்தக வழி உலகின் அதிக போக்குவரத்து நிறைந்ததாக காணப்படுகிறது.Atlantic Ocean - en IHO.png Atlantic Ocean - en IHO.png 328 × 328; 28 KB
இந்திய பேராழி
தொகுமொத்த பரப்பில் 20% வரை பரவிக் காணப்படுகிறது.வடக்கே இந்தியா,பாகிஸ்தான்,கிழக்கே ஆஸ்திரேலியா,சுந்தா தீவுகள் ம்ற்றும் மலேசியா,மேற்கில் அரேபிய தீபகற்பம் மற்றும் ஆப்பிரிக்காவை எல்லைகளாக கொண்டுள்ளது.ஆப்பிரிக்காவின் தென் முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பசுபிக் பேராழியுடனும் இணைகிண்றது.இதன் சராசரி ஆழம் 4000 மீட்டர்கள் ஆகும். அந்தமான் நிகோபர்,மாலத்தீவுகள்,மடகாஸ்கர்,இலங்கை,சுமத்ரா மற்றும் ஜாவா போன்ற முக்கியமான தீவுககளைக் கொண்டுள்ளது.Orthographic projection centred over Diego Garcia.png Orthographic projection centred over Diego Garcia.png 488 × 487; 32 KB
அண்டார்டிக்கா பேராழி
தொகுஇது நான்காவது பெரிய குளிரான பேராழி. தென்கோடி முனையில் காணப்படுவதால் ' தென் பேராழி ' என அழைக்கப்படுகிறது.அண்டார்டிக்கா கண்டத்தை சுற்றி காணப்படும் இப்பேராழியின் சராசரி ஆழம் 4500 மீட்டர்கள் ஆகும்.வெப்பநிலை 10• செல்சியஸ் வரை வேறுபடுகிறது.குளிர்காலத்தில் பேராழியின் மேல் பகுதி பனிக்கட்டிகளாக உறைந்திருக்கும்.Seaice min-max hg.png Seaice min-max hg.png 1,121 × 724; 222 KB
ஆர்டிக் பேராழி
தொகுவட்ட வடிவம் கொண்ட இப்பேராழி புவியின் வடதுருவத்தில் அமைந்துள்ளது.இதன் மொத்த பரப்பு 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர்களும்,ஆழம் சராசரியாக 4000 மீட்டர்கள் ஆகும்.விக்டோரியா தீவுகள்,எலிசபத் தீவுகள்,ஐஸ்லாந்து,ஸ்பிட்டிபெர்ஜன் மற்றும் நோவாகா சோம்லியா போன்ற முக்கியமான தீவுகளை கொண்டுள்ளது.Arctic Ocean - en.png Arctic Ocean - en.png 329 × 330; 14 KB
கடல்கள்
தொகுகுறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்ட பகுதியே கடல்கள் எனப்படும்,முக்கியமான கடல்கள் தென் சீனா கடல்,கரீபியன் கடல்,மத்திய தரை கடல்,காஸ்பியன் கடல்,கருங்கடல்,அரபிக்கடல்,செங்கடல் போன்றவை ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ பாடநூல் குழு (2011). பேராழியியல் ஒரு அறிமுகம். தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம். pp. 135–138.