பேரியம் ஆர்த்தோ தைட்டனேட்டு

வேதிச் சேர்மம்

பேரியம் ஆர்த்தோ தைட்டனேட்டு (Barium orthotitanate) என்பது Ba2TiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற திண்மப் பொருளாகும். பேரியம் தைட்டனேட்டுடன் கொண்டுள்ள தொடர்பின் காரணமாக இது ஒரு பயனுள்ள மின்பீங்கான் பொருளாகப் பயன்படுகிறது.

கட்டமைப்பு

தொகு
 
தாழ்-வெப்பநிலை Ba2TiO4 – TiO4 நான்முகி நீல நிறத்தில்; Ba அணுக்கள் பச்சை; O அணுக்கள் சிவப்பு

P21/n சமச்சீர்நிலையுடன் கூடிய குறைந்த வெப்பநிலை (β) கட்டம்[1] மற்றும் P21nb சமச்சீர்நிலையுடன் கூடிய உயர் வெப்பநிலை (α′) கட்டம் [2]என்ற இரண்டு நிலைகளை பேரியம் ஆர்த்தோ தைட்டனேட்டு கொண்டுள்ளது. இதன் கட்டமைப்பு தைட்டனேட்டுகளில் அசாதாரணமானதாகும். ஏனெனில் இதன் தைட்டானியம் அணுக்கள் ஆறு-ஆக்சிசன் எண்முகங்களுக்குப் பதிலாக நான்கு-ஆக்சிசன் நான்முகிகளில் அமர்ந்திருக்கும்.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wu, Kang Kun; Brown, I. D. (10 April 1973). "The Crystal Structure of β-Barium Orthotitanate, β-Ba2TiO4, and the Bond Strength-Bond Length Curve of Ti-O". Acta Crystallographica B29 (9): 2009–2012. doi:10.1107/S0567740873005959. 
  2. Günter, John R.; Jameson, Geoffrey B. (14 September 1983). "Orthorhombic Barium Orthotitanate, αவார்ப்புரு:Prime-Ba2TiO4". Acta Crystallographica C40: 207–210. doi:10.1107/S0108270184003619. 
  3. Shanker, Vishnu; Ahmad, Tokeer; Ganguli, Ashok K. (October 2004). "Investigation of Ba2–xSrxTiO4: Structural aspects and dielectric properties". Bulletin of Materials Science 27 (5): 421–427. doi:10.1007/BF02708558.