பேர்பெரியான்குப்பம்
பேர்பெரியான்குப்பம் (PerperiyanKuppam) என்பது கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலிக்கு வடக்கே சுமார் 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும்.[1] இக்கிராமமானது முன்னாளில் கல்லோடவி அழைக்கப்பட்டது. இவ்வூருக்கு அனந்தீஸ்வரம், புதுப்பேரூர் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இக்கிராமத்தில் 2000 பேர் வசிக்கின்றனர்.[மேற்கோள் தேவை] இதில் சுமார் 1200 பேர்களுக்கு வாக்குரிமை உள்ளது.[மேற்கோள் தேவை]
நில அமைப்பு
தொகுஇந்த ஊரில் மிகப்பழைமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலானது வழக்கு மொழியில் அனந்தீஸ்வரன் கோயில் என்றும் தமிழில் மகிழ்வுதரும் அம்மையப்பர் ஆலயம் என்றும் வழங்கபடுகிறது. அதன் அருகே குளம் ஒன்றும் உள்ளது. இந்த குளமானது கோடைகாலத்தில் பேர்பெரியான்குப்பம் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.
கல்வி
தொகுஇக்கிராமத்தில் சுமார் 5 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 3 பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்படுபவை மற்ற இரண்டு பள்ளிகள் தனியார் பள்ளிகள். அவை பின்வருமாறு:
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
- கலியபெருமாள் ஆங்கிலப்பள்ளி
- தென்றல் ஆங்கிலப்பள்ளி
ஊர் அமைப்பு
தொகுஇக்கிராமமானது சுமார் ஆறு தெருக்களைக் கொண்டது அவைகள்:
- மருவன் தெரு
- கந்தன் தெரு
- ராசன் தெரு
- வடக்குத் தெரு
- மணியக்காரர் தெரு
- டாக்டர் அம்பேத்கர் தெரு
சிறப்புகள்
தொகுசௌந்தரபாண்டிய சோழன் எனும் குறுநில மன்னரால், ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு சிவன் கோயிலும் அதை ஒட்டி ஏரி ஒன்றும் இவ்வட்டார மக்களின் குடிநீர் தேவைக்காக ஏற்படுத்தபட்டது. பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் அவர்களின் திருவதிகை கோயில் வரலாறு எனும் ஆராய்ச்சி நூலில் பேர்பெரியான்குப்பம் பற்றிய அறிய தகவல்களை காணலாம்.
பிற வசதிகள்
தொகு- பி. எஸ். என். எல். இணைப்பகம்
- அரசு சுகாதார நிலையம்
- துணை சுகாதார நிலையம்,
- கனரா வங்கி
- மாவட்ட மகளிர் குழுக்களின் தலைமை அலுவலகம்.