பைக்கஸ் ஆரியா

தாவர இனம்

பைக்கஸ் ஆரியா (Ficus aurea) என்கின்ற தாவரமானது மோரேசியீ குடும்பத்தைச் சார்ந்த ஒரு மரமாகும். இந்த மரம் தங்க அத்தி (golden fig) என்றும் அழைக்கப்படுகறது. இது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புளோரிடா மாகாணத்தில் வட மற்றும் மத்திய கரீபியன் பகுதிகளிலும் தெற்கு மெக்கிகோவிலும் மற்றும் பனாமாவிற்குத் தெற்கே உள்ள மத்திய அமெரிக்காவிலும் அதிகளவில் காணப்படுகின்றது.[1] 1846-ஆம் ஆண்டில் இனத்தை விவரித்த ஆங்கில தாவரவியலாளர் தாமஸ் நட்டால், ஆரியா என்ற குறிப்பிட்ட அடைமொழியைப் பயன்படுத்தினார்.

மரத்தைக் கொல்லும் மரம்

மரத்தின் அமைவு

தொகு
 
நசுக்கிகொல்லும் மரத்தின் உள்தோற்றம்

இத்தாவரமானது 30 மீ (98 அடி) உயரத்தை எட்டக்கூடிய ஒரு மரமாகும்.[2] இதன் விதை முளைப்பானது இத்தாவரத்தின் வேர்கள் தரையுடன் தொடர்பு கொள்ளும் வரை  பொதுவாக ஒரு புரவலராகச் செயல்படும் மரத்தின் விதானத்தில் நடைபெறுகிறது. அதன் வேர்கள் தரையுடன் தொடர்பு கொள்ளும் வரை நாற்று ஒரு தொற்றுத்தாவரமாக வாழ்கிறது. அதன் பிறகு, இத்தாவரம் அதன் புரவலராகச் செயல்பட்ட மரத்தைப் பெரிதாக்குகிறது. மேலும், அதன்  கழுத்தை நெரிப்பது போன்று இறுக்குகிறது, இறுதியில் தன் சொந்த உரிமையில் சுதந்திரமாக நிற்கும் மரமாகிறது. இம்மரம் 30 மீ (98 அடி) உயரத்தை எட்டக்கூடிய ஒரு மரமாகும்.[3] இத்தாவரம் ஓர் ஓரில்லத் தாவரம் ஆகும். ஒவ்வொரு மரமும் செயல்நிலையில் உள்ள ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் கொண்டுள்ளன.[4] இத்தாரவத்தின் விதை பரவலானது பறவைகள் மூலமும் நடைபெறுகிறது. பறவைகள் இதன் பழத்தை சாப்பிட்டு வேறு மரத்தின் கிளைகளில் இதன் எச்சத்தை விடுகின்றன. நல்ல சூழ்நிலை கிடைக்கும்போது விதை முளைத்து வேர் விடுகிறது. வேர் மிக நீண்டு வளர்கிறது. இதனுடைய வேர் மிக நீளமானது. இது மரத்தைச் சுற்றித் தரையை அடைகிறது. தரையிலிருந்து மிக அதிகப்படியான நீரை மேலும் மேலும் உறிஞ்சி வேகமாக வளர்கிறது. மேலும் பல வேர்கள் மரத்தை சுற்றிக் கொண்டு தரையை அடைகிறது. மரம் வளர வளர இதன் வேர் கழுத்தை நெக்குவது போல் நெருக்குகிறது. இந்த அத்திமரம் வேகமாக வளர்வதால் நிலத்தில் உள்ள நீரை உறிவதாலும், சூரிய ஒளி, காற்று ஆகியவை பற்றாக்குறையாலும் இது தொற்றி வளர்ந்த மரம் சாகடிக்கப்படுகிறது. மேலும், மேலும் அதிகப்படியான வேர் வளர்ந்து இம்மரம் பெரிதாகிறது. அத்தி சாதியில் 600 இன மரங்கள் உள்ளன.

 
ஃபைக்கஸ் ஆரியா Strangler Fig

மேற்கோள்கள்

தொகு
  1. Berg, C.C. (2007). "Proposals for treating four species complexes in Ficus subgenus Urostigma section Americanae (Moraceae)". Blumea 52 (2): 295–312. doi:10.3767/000651907X609034. http://www.repository.naturalis.nl/document/565073. 
  2. Flora de Nicaragua database. Tropicos. (in எசுப்பானிய மொழி) Retrieved on 2008-07-02
  3. Flora de Nicaragua database. Tropicos. (in எசுப்பானிய மொழி) Retrieved on 2008-07-02
  4. Bronstein, Judith L.; Patel, Aviva (1992). "Causes and Consequences of Within-Tree Phenological Patterns in the Florida Strangling Fig, Ficus aurea (Moraceae)". American Journal of Botany 79 (1): 41–48. doi:10.2307/2445195. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்கஸ்_ஆரியா&oldid=4054657" இலிருந்து மீள்விக்கப்பட்டது