பைசா ஜமா முகமது
பைசா ஜமா முகமது (Faiza Jama Mohamed) (பிறப்பு: 1958) இவர் ஒரு சோமாலிய பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய சமத்துவ இயக்குனருமாவார். இவர் மாபுடோ நெறிமுறையின் முக்கிய பிரச்சாரகராகவும், பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராகவும் இருந்து வருகிறார்.
வாழ்க்கை
தொகுபைசா ஜமா முகமது, பிரெஸ்னோவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டில் இவர் டென் ஹேக்கில் உள்ள சமூக ஆய்வுகள் நிறுவனத்தில் மனித உரிமையில் சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் பைசா ஜமா மொஹமட் பம்பசுகா நியூஸ் என்ற இதழில் தலையங்கங்களை எழுதியுள்ளார். பெண்கள் உரிமைகள் குறித்த ஆப்பிரிக்க நெறிமுறையின் முக்கியத்துவத்தை வாதிட்டார் . [1] [2] இவர் தி கார்டியன் பத்திரிகைக்காகவும் எழுதியுள்ளார். [3]
குறிப்புகள்
தொகு- ↑ 'African Leaders Must Act Now to Ratify the Protocol on the Rights of Women', Pambasuka News, 162, 24 June 2004. Reprinted in African Voices on Development and Social Justice: Editorials from Pambazuka News 2004. Fahamu/Pambazuka. 2005. pp. 101–103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9987-417-35-3.
- ↑ 'Putting an End to Female Genital Mutilation: The African Protocol on the Rights of Women', Pambasuka News, 173, 9 September 2004. Reprinted in African Voices on Development and Social Justice: Editorials from Pambazuka News 2004. Fahamu/Pambazuka. 2005. pp. 114–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9987-417-35-3.
- ↑ Does Kenya have the courage to lead on women's rights in Africa, தி கார்டியன், 21 April 2014. Accessed 10 March 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Our July Interview with Faiza Jama Mohamed , interview with Make Every Woman Count, July 2011
- In Visibility: Faiza Jama Mohamed, interview with London School of Economics, 2017