பைசு பாலட் பதக்கம்
ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமி வழங்கும் பரிசு பைசு பாலட் பதக்கம் (Buys Ballot Medal) ஆகும். இது 1888ஆம் ஆண்டில் வானிலை ஆய்வாளர் சி.எச்.டி பைசு பாலட்டின் சாதனைகளை கெளரவிப்பதற்காக நிறுவப்பட்டது. வானிலை ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த ஒரு நபருக்கு ஏறக்குறைய ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை பதக்கம் பெற்றவர்கள்:[1]
- 1893 – ஜூலியஸ் வான் ஹான், ஆஸ்திரியா
- 1903 – ரிச்சர்ட் அஸ்மான் மற்றும் ஆர்தர் பெர்சன், ஜெர்மனி
- 1913 – ஹ்யூகோ ஹெர்கெல், ஜெர்மனி
- 1923 – சர் நேப்பியர் ஷா, ஐக்கிய இராச்சியம்
- 1933 – வில்ஹெல்ம் பிஜெர்க்னெஸ், நோர்வே
- 1948 – ஸ்வெர்ரே பீட்டர்சன், நோர்வே
- 1953 – குஸ்டாவ் ஸ்வோபோடா, செக் குடியரசு
- 1963 – எரிக் பால்மன், பின்லாந்து
- 1973 – ஜோசப் ஸ்மாகோரின்ஸ்கி, அமெரிக்கா
- 1982 – அக்சல் சி. வின்-நீல்சன், டென்மார்க்
- 1995 – வீரபத்ரன் இராமநாதன், அமெரிக்கா
- 2004 – எட்வர்ட் நார்டன் லோரென்ஸ், அமெரிக்கா
- 2014 – சர் பிரையன் ஹோஸ்கின்ஸ், ஐக்கிய இராச்சியம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Buys Ballot Medal — KNAW". www.knaw.nl (in ஆங்கிலம்). Archived from the original on 2020-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-03.