பைடால குருமூர்த்தி சாஸ்திரிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வாழ்க்கை வரலாறு
தொகுஇவரை "வெயிகீத" (1000 கீத்ங்களை செய்த) பைடால குருமூர்த்தி சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு. "பைடால" என்பது இவரின் வீட்டுப் பெயர் ஆகும். முரிகி நாட்டுத் தெலுங்கு பிராமணர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கயத்தார் எனும் கிராமம் இவரது பிறந்த ஊராகும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் விசேட பாண்டியத்தை அடைந்தவர். சதுசாஸ்திரபண்டிதர் 18ம் நூற்றாண்டில் விளங்கிய சிறந்த லக்ஷ்ண லக்ஷய வித்துவான்களில் ஒருவர். அதிபால்யத்திலேயே சென்னைப் பட்டணத்திற்கு வந்து மனவி சின்னையா முதலியாரவர்களால் விசேடமாக கெளரவிக்கப்பட்டு வந்தார். சென்னைப் பட்டணத்திலேயே அதிக காலம் வாழ்ந்தார்.
இசைப் பணி
தொகுஇவர் அனேக லக்ஷண கீதங்களையும், சஞ்சாரி கீதங்களையும், பிரபந்தங்களையும், கீர்த்தனைகளையும் சமஸ்கிருத பாஷையில் த்ன்னுடைய பெயரையே முத்திரையாக வைத்துச் செய்தார். இவர் தினம் ஒரு கீதமாவது செய்வார். இவருடைய லக்ஷண கீதங்களும், சஞ்சாரி கீதங்களும் மிகப் பிரசித்தமானவை. எங்கும் பாடப்பட்டு வருகின்றன. கீத்ங்களைச் செய்த வாக்கேயகாரர்களில் இவரைப் புரந்தரதாசருக்கு அடுத்ததாகச் சொல்வோம். "கானவித்யா துரந்தரவேங்கட சுப்பையர்டுரோ" என்று சாஸ்திரிகள் செய்த ஒரு கீதத்தினின்றும் இவர் தஞ்சை துளசிமகாராஜாவின் சமஸ்தானத்தை அலங்கரித்த சொண்டி வெங்கட சுப்பையரவர்களின் சிஷ்யரென தெரிய வருகிறது. கீதங்களின் சாகித்யம் பகவான் ஸ்தோத்திரமாகவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் குருபரமாகக் கூட சாகித்யம் செய்யலாம் என்பதற்கு இந்த சப்த தாள கீதமே அத்தாட்சியாக விளங்குகிறது.
குருமூர்த்தியை போல இன்னொருவர் பாடுவது மிக மிக அரிது என்று அந்தக் காலத்து வித்துவான்கள் சொல்வார்கள். "கனநய தேச்யம்" பாடும் முறைகளில் இவர் சிறந்த வித்துவானாக விளங்கினார். தஞ்சாவூர் மகாராஜா சாஸ்திரிகளுக்கு பல்லக்கு கொடுத்து கெளரவித்தார். இவருடைய சகோதரர் பைடால சுப்பராய சாஸ்திரிகளும் சிறந்த வாக்கேயகாரர். அநேக வர்ணங்களை செய்திருக்கிறார்.
சிஷ்யர்கள்
தொகுபல கீர்த்தனகளைச் செய்து காஞ்சிபுரத்தில் சிறந்த வித்துவானாக விளங்கிய கூலசேக்ஷய்யரும் அழகான கீதங்களையும், ஸ்வரஜதிகளையும், வர்ணங்களையும் செய்த சோபனாத்ரி என்ற வாக்கேயகாரரும் குருமூர்த்தி அவர்களின் பிரதான சிஷ்யர்களாவர்.
தஞ்சாவூரில் பிடில் வித்துவானாக விளங்கிய அம்பாயிரம் என்பவரின் பிடில் வாசிப்பைக் கேட்டு சாஸ்திரிகள் பிரமித்து அவரை "சிங்கக்குட்டி" என்றழைத்தார். அன்று முதல் அம்பாயிரத்தை எல்லோரும் "சிங்கக்குட்டி என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
பைடால குருமூர்த்தி சாஸ்திரிகளாலும், வீணைக்குப்பையர், தஞ்சாவூர் சிங்கராசாரியர், திருவொற்றியூர் தியாகய்யர் முதலிய பெரியோர்களாலும் சென்னை மாநகர் கர்நாடகசங்கீத வித்தைக்கு ஒரு முக்கிய பீடமாக விளங்கலாயிற்று.