பைப்பாட் புத்தன்காவு பகவதி கோயில்

பைப்பாட் புத்தன்காவு பகவதி கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் பைப்பாட்டில் அமைந்துள்ள ஒரு பழமையான பகவதி கோயிலாகும். இக்கோயில் சங்கனாச்சேரி - கவியூர் சாலையில் பைப்பாட்டில், சங்கனாச்சேரியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

விழாக்கள்

தொகு

இக்கோயிலின் ஆண்டு விழா மலையாள மீனம் மாதத்தில் பரணி நாளில் கொண்டாடப்படுகிறது. அருகிலுள்ள கோயில்களின் கொண்டாட்டங்களில் களமெழுத்தும் பட்டும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

நிர்வாகம்

தொகு

இக்கோயில் NSS கரயோகம் எண் 286 பைப்பாட் கிழக்கு, மற்றும் NSS கரயோகம் எண் 1794 பைப்பாட் மேற்கு ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவஸ்வம் உறுப்பினர்களின் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு கோயிலின் அலுவல்களைக் கவனிக்கின்ற அதிகாரத்தைப் பெற்ற அமைப்பாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "PUTHENKAVU DEVI TEMPLE PAIPPAD - AMME NARAYANA DEVI NARAYANA". பார்க்கப்பட்ட நாள் 2 January 2013.