பையர்நத்தம்
பையர்நத்தம் (Bairanatham) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 340 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°56'38.4"N 78°18'01.5"E ஆகும். [1] இங்கு 1199 குடும்பங்களும் 5,754 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 2,924 பெண்கள் 2,830 ஆவா். இங்கு அரசு மேனிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியும் உள்ளது. இங்கு புகழ்மிகு அங்காளம்மன் ஆலயம் உள்ளது.