பைரோசல்பேட்டு
டைசல்பேட்டு
பைரோசல்பேட்டு (pyrosulfate) என்பது S2O72− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். ஐயுபிஏசி முறையில் இதை டைசல்பேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்.ஒரு டைகுரோமேட்டு போன்ற கட்டமைப்பை பைரோசல்பேட்டு பெற்றுள்ளது. இரண்டு மூலைகளை பகிர்ந்து கொள்ளும் SO4 நான்முகியானது ஆக்சிசன் அணு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது[1]. S2O72− எதிர்மின் அயனியில் +6. என்ற ஆக்சிசனேற்ற நிலையில் கந்தகம் உள்ளது. ஐதரசன் டைசல்பேட்டு (HS2O−7) அல்லது ஐதரசன் பைரோசல்பேட்டு அயனிக்குரிய இணை காரமாக இது கருதப்படுகிறது. அதே சமயத்தில் டைசல்பியூரிக் அமிலத்திற்கு (பைரோசல்பியூரிக் அமிலம்) இது இணை காரமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The crystal structure determinations and refinements of K2S2O7, KNaS2O7 and Na2S2O7 from X-ray powder and single crystal diffraction data", Ståhl K, Balic-Zunic T, da Silva F, Eriksen K M, Berg R W, Fehrmann R Journal of Solid State Chemistry 178, 1697–1704, (2005) எஆசு:10.1016/j.jssc.2005.03.022