பொடுதலை
பொடுதலை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Verbenaceae
|
பேரினம்: | Phyla
|
இனம்: | P. nodiflora
|
இருசொற் பெயரீடு | |
Phyla nodiflora (லி.) கிரீன் |
பொடுதலை, பொடுதினை பூஞ்சாதம், பூற்சாதம் (Phyla nodiflora) என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும்.[1]
பெயர்க் காரணம்
தொகுஇதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
தொகுபொடுதலையின் தண்டானது சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில் வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும் இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது.[2]
"பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி" என்பது பழமொழி.
குறிப்புகள்
தொகு- ↑ Pharmacopia indica.
- ↑ டாக்டர் வி. விக்ரம் குமார் (23 சூன் 2018). "'தலை' காக்கும் பொடு'தலை!'". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2018.
உசாத்துணை
தொகு- Pink, A. (2004). Gardening for the Million. Project Gutenberg Literary Archive Foundation.
வெளி இணைப்புகள்
தொகு- "Phyla nodiflora". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Jepson Manual Treatment
- USDA Plants Profile: Phyla nodiflora photos
- (போர்த்துக்கேயம்) Flora Brasiliensis: Lippia reptans