பொட்டென்டில்லா சிம்ப்ளெக்ஸ்

பொட்டென்டில்லா சிம்ப்ளெக்ஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பொ. சிம்ப்ளெக்ஸ்
இருசொற் பெயரீடு
பொட்டென்டில்லா சிம்ப்ளெக்ஸ்
Michx.

பொட்டென்டில்லா சிம்ப்ளெக்ஸ் என்ற தாவரம் பொது சிங்கிஃபாயில் அல்லது பழங்காட்டு ஐவிரல்கள் அல்லது பழங்காட்டு சிங்கிஃபாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு வட அமெரிக்காவில் ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் லாப்ரடாரிலிருந்து டெக்ஸாஸ், அலபாமா மற்றும் புளோரிடா வரை தாயகமாகக் கொண்ட ரோசேசி குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுச் செடியாகும்.

இது தரையில் படரக்கூடிய தண்டுகளையும்(கணுக்களில் வேர்விடக்கூடிய), மஞ்சள் மலர்களையும் உடைய தாவரமாகும். இதன் இலைகள் சிறகு போன்று, ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். இவை ஓடும் தண்டுகளிலிருந்து தோன்றும். ஐந்து மஞ்சள் இதழ்களை ( சுமார் 4 - 10 மி.மீ. நீளம்) உடைய முழுமையான மலர்கள், மார்ச் முதல் சூன் வரை பூக்கும் தன்மையுடையன. இது வனப்பகுதிகள் வயல்கள் மற்றும் மனித நடமாட்டமுடைய பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகிறது.

கொத்தனார், தச்சர் தேனீ, ஹாலிக்டிட் தேனீக்கள், தேனீ, குயில் தேனீக்கள், சிர்பிஃட் ஈக்கள், டாக்னிட் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. குளவிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் மிகக் குறைந்த அளவிலேயே மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. முயல்களும் கொறிணி வகை விலங்குகளும் இதன் இலைகளை உட்கொள்ளும். இளந்தளிர்களும், இலைகளும் பச்சைக்காய்கறிக் கலவையாக (சமைக்காமல்) உண்ணப்படுகின்றன. இது அலங்காரச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Weakley, Alan S. (May 2015). Flora of the Southern and Mid-Atlantic States. Chapel Hill, NC, USA: The University of North Carolina Herbarium. p. 585-587.
  2. "Plants Profile for Potentilla simplex (common cinquefoil)". USDA Natural Resources Conservation Service. Retrieved 28 Mar 2016.
  3. "Common Cinquefoil (Potentilla simplex)". Lady Bird Johnson Wildflower Center. Retrieved 28 Mar 2016.
  4. "Potentilla simplex (common cinquefoil)". John Hilty. Retrieved 28 Mar 2016.
  5. "Cinquefoil Herb Use". Alternative Nature Herbals. Retrieved 28 Mar 2016.