பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார் சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 154ஆம் பாடலாக உள்ளது.
- பொதும்பில் என்பது இவர் ஊர்.
- புல்லாளம் என்பது இவர் கண்களிலிருந்த புல் போன்ற வரிக் கோடுகள். ஒப்புநோக்குக பூங்கணுத்திரையார்
இவரதுபாடல் சொல்லும் செய்திகள்
தொகுபோர்வினை முடிந்து மனை திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.
பகுவாய்த் தேரை
- மழை பொழிந்ததால் தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கறங்குகிறது(ஒலிக்கிறது).
பிடவம்
- பிடவம் பூக்கள் நுண்மணல் போல் வழியெங்கும் வரிவரியாக வரித்துக் கிடக்கின்றன.
கோடல்
- பாம்பு படமெடுப்பது போல கோடல் பூ பூத்திருக்கிறது.
இரலை
- இரலைமான் ஊற்றோடும் அறல்நீரைப் பருகித் தன் துணையோடு படுத்துக்கிடக்கிறது.
வலவ!
- நம் தேரில் பூட்டிய குதிரை ஓடும் மணியோசை காடு முழுவதும் கேட்கும்படி தேரை ஓட்டுக!
(தேர்க்காலில் அகப்பட்டுக்கொள்ளாமல் அவை விலகட்டும்).
நான் அம்மா அரிவையைத் துன்னவேண்டும்.
- துன்னல் = தைத்தல், புணர்தல்