பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை குண்டுவெடிப்பு

பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை குண்டுவெடிப்பு (Ponnampalam Memorial hospital bombing) 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதியன்று நிகழ்ந்தது. இலங்கை விமானப்படையினர் நாட்டின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த [1]பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது இக்குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர். மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்தது. 61 நோயாளிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதேவேளையில் இலங்கை தரைப்படையினரும் மருத்துவமனை மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் உயிர்பிழைத்திருந்த நோயாளிகளைக் கூட மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது.[2][3][4]

பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை
Ponnampalam Memorial hospital
இடம்புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை
நாள்6 பிப்ரவரி 2009
தாக்குதல்
வகை
பீரங்கி குண்டு வெடிப்பு, மற்றும்
வான்வழித் தாக்குதல்
ஆயுதம்பீரங்கி வெடிப்பு, வாழ்வழி குண்டு வீச்சு
இறப்பு(கள்)61
தாக்கியோர்இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை இராணுவம்

வரலாறு

தொகு

பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை நவீன வசதிகளைக் கொண்ட ஓர் அரச சார்பற்ற நிறுவனமாகும். போர்க்காலங்களில் அளப்பரிய பணியினை மக்களுக்கு வழங்கிய மருத்துவர் பொன்னம்பலம் அவர்களின் நினைவாக 1996 ஆம் ஆண்டு இம் மருத்துவமனை தொடங்கப்பட்டது. போர்நிறுத்த காலத்தில் பல வெளிநாட்டு நிபுணர்கள், புலம்பெயர் மருத்துவர்கள் போன்றோர் மருத்துவமனையின் நவீன வசதிகளை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றினர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளால் இம்மருத்துவமனை நடத்தப்பட்டது.[5][6]

இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயத்திலுள்ள மருத்துவமனைகள் மீது கண்மூடித்தனமாக பீரங்கிகளால் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், 2008 ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை தொடங்கி குறைந்தது எட்டு மருத்துவமனைகள் உட்பட வான்வழியாகத் தாக்கியதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியது.[7] மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும் கூறியது. மருத்துவமனைகள் தெளிவாகக் குறிவைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறினர்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையும், இலங்கை இராணுவம் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை எனக் கண்டறிந்தது.[8]

"பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே எந்த ஒரு மருத்துவமனையும் செயல்படக்கூடாது. பாதுகாப்புக்கு அப்பாற்பட்ட அனைத்தும் முறையான இலக்கே" என்று கோத்தபய இராசபக்சே கூறியதுடன், இத்தாக்குதல் நியாயமானது என்றும் கூறினார்.[9] இலங்கைத் தீவில் சண்டையிடும் தரப்பினரிடம், "புதுக்குடியிருப்பு மருத்துவமனை அல்லது "பாதுகாப்பான வலயத்திற்கு உள்ளே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்" என்று அமெரிக்க இராசாங்கச் செயலர் இலாரி கிளிண்டனும்ம, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்டும் இணைந்து அழைப்பு விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. . https://telibrary.com/ponnampalam-memorial-hospital-in-puthukkudiyiruppu/. பார்த்த நாள்: 26 March 2022. 
  2. "SLAF bombs Ponnampalam hospital, 61 patients killed". Tamilnet. 7 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.
  3. Julian Sheather. "The Sri Lankan doctors and the challenge for medical leadership". Indian Journal of Medical Ethics. https://doi.org/10.20529/IJME.2009.063. 
  4. "BOMBING OF PONNAMPALAM MEMORIAL HOSPITAL IN SRI LANKA EDM (Early Day Motion)726: tabled on 09 February 2009". Parliament UK. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Health in crisis in NE". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  6. "Vanni hospital aims high". Tamilnet. 16 October 1995. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.
  7. "Sri Lanka: Repeated Shelling of Hospitals Evidence of War Crimes". Human Rights Watch. 8 May 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2021.
  8. Darusman, Marzuki; Sooka, Yasmin & Ratner, Steven (31 March 2011). Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka (PDF). United Nations.
  9. "PTK hospital, legitimate military target - Gotabhaya". Tamilnet. 3 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.
  10. "Hillary Clinton, David Miliband urge to halt attacks on PTK hospital, Safe Zone". Tamilnet. 4 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.