பொன்னி (புதினம்)
பொன்னி (Ponni) 1967 ஆம் ஆண்டில் மலயாட்டூர் இராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட மலையாள புதினம் ஆகும். மன்னார்காடு மல்லீசுவரம் மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய அட்டப்பாடியைச் சேர்ந்த ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட புதினம் ஆகும்.[1]
நூலாசிரியர் | மலயாட்டூர் இராமகிருஷ்ணன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | சாகித்யபிரவார்தகா சகாகரனாசங்கம் D. C. Books |
புதினத்தின் சுருக்கம்
தொகுஇந்த புதினமானது மலபார் பகுதியில் உள்ள அட்டப்பாடியில வசிக்கும் ஆதிவாசிகளின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த வாழ்விடமானது நீலகிரி மலையின் தெற்கிலும், கேரளா வின் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் நிலத்தைப் பண்படுத்த மரங்களை வெட்டி எரித்து பின் சில காலம் கழித்து சாகுபடி செய்வர். பழங்குடியின மக்களின் இந்த விவசாய நடைமுறையை அரசாங்கமானது திடீரெனத் தடை செய்து வேறு புதிய தொழில்களில் ஈடுபட வலியுறுத்துகிறது. இந்தக் கதையின் நாயகன் தற்போதைய உலகின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு தன் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்கிறான். இந்தப் புதினத்தில், ஆதிவாசி மக்களின் பாரம்பரியமான திருமணச் சடங்கினை முன்னிட்ட நடனம், பாரம்பரியம் சார்ந்த பாடல்கள் ஆகியவை யதார்த்தமான முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. பொன்னியின் பாத்திரப்படைப்புகள் கன்னட சாயம் கொண்ட தமிழ் கலந்த மலையாள மொழியில் உரையாடவும், பாடவும் செய்கிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ponni: 1976". The Hindu. 16 February 2015 இம் மூலத்தில் இருந்து 5 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170205080937/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/ponni-1976/article6899408.ece.