பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீசுவரர் கோயில்

பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொன்விளைத்த களத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் மூலவராக முன்குடுமீசுவரர் உள்ளார். மூலவரின் லிங்க பாண உச்சியில் குடுமி போன்ற தோற்றம் காணப்படுவதால் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.இங்குள்ள இறைவி மீனாட்சி ஆவார். கோயிலின் மரம் வில்வம் ஆகும். தீர்த்தம் வில்வ தீர்த்தம் ஆகும். பங்குனியில் பிரம்மோற்சவம், சித்திரா பௌர்ணமி, ஆடிப்பூரம், ஐப்பசியின் அன்னாபிசேகம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, மார்கழி, திருவாதிரை, சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்தின்போது சண்டிகேசுவரருக்குப் பதிலாக கூற்றுவ நாயனார் புறப்பாடு நடைபெறுகிறது.[1]

அமைப்பு

தொகு

மூலவர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் உள்ளார். திருச்சுற்றில் அணுக்கை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். கோயில் முன் மண்டபத்தில் கூற்றுவ நாயனார் உள்ளார். சிவனால் மணிமகுடம் சூட்டப்பெற்ற அவர் பல கோயில்களில் திருப்பணிகள் செய்தார். அவ்வாறான கோயில்களில் இக்கோயில்களும் ஒன்றாகும். இப்பகுதியில் சிவ பக்தர் ஒருவர் அந்தணர் ஒருவரிடம் பணியாற்றினார். ஊதியமாக நிலத்தின் ஒரு பகுதியைப் பெற்றார். அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நெல்லுக்குப் பதிலாக பொன் விளைவதை அறிந்தார். தனது வயலில் விளையும் மொத்த நெல்லையும் எடுத்துக்கொண்டு அவருடைய வயலில் விளைவதை தனக்கு தரும்படி கேட்டுக்கொண்டார். பணியாளரின் வயலில் பொன் விளைந்தபோது அதனை இவ்வாறாக எடுத்துக்கொண்டார். இது மன்னனுக்குத் தெரியவர அந்த வயலை மன்னர் அரசுக்கணக்கில் எடுத்துக்கொண்டார். சிவனருளால் பணியாளருக்கு அதிக நெல் கிடைக்க ஆரம்பித்தது. பொன் விளைந்த ஊர் ஆதலால் இவ்வூர் பொன்விளைந்த களத்தூர் என்றழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு