பொம்மைச்சீட்டு

பொம்மைச்சீட்டு ஒரு சூதாட்ட விளையாட்டு.

பொம்மைச்சீட்டு வைத்திருபவர் ஒரு பொம்மைச்சீட்டும் இரண்டு எண்சீட்டும் வைத்திருப்பார். அவற்றைக் காட்டிய பின்னர் கவிழ்த்து வைத்துப் பொம்மைச்சீட்டின்மீது வைக்கும் பணத்தொகை இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என்பார். கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் சீட்டை அங்குமிங்கும் சுழற்றி இடம் பாற்றி வெத்துப் பணம் கட்டச் சொல்வார். எது பொம்மைச்சீட்டு எனத் தெரியாமல் அதிட்டம் விழட்டும் எனச் சொல்லி மக்கள் சீட்டின்மேல் பணம் வைப்பர்.

பொம்மைச் சீட்டின்மீது வைக்கப்பட்ட பணம் உண்மையாகவே திருப்பித் தரப்படும். என்றாலும் எண்சீட்டு இரண்டு இருப்பதால் அதன்மீது வைத்த பணம் ஆட்டம் காட்டுபவருக்கு ஆதாயமாக முடியும். தேர்த்திருவிழாக் காலங்களில் இது ஆடப்படும். மக்களை ஏமாற்றும் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மைச்சீட்டு&oldid=1017463" இலிருந்து மீள்விக்கப்பட்டது